கம்பராமாயணம் 5239 · சுந்தர 4.123

Section சுந்தர காண்டம் / 4. காட்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

மலை எடுத்து - கயிலாயமலையைப் பெயர்த்து; எண்திசை காக்கும் மாக்களை - எட்டுத் திக்குகளையும் காக்கும் யானைகளின்; 'நிலை கெடுத்தேன்' - உறுதிப்பாட்டை அழித்தேன்; எனும் மாற்றம் - என்கின்ற மொழியை; நேரும் நீ - கூறிக் கொண்டுள்ள நீ; இளையவன் - இலக்குவன்; சிலை எடுத்து நிற்க - வில் பற்றி என்னைப் பாதுகாத்து நிற்க (அப்போது); சேர்ந்திலை - வரவில்லை; தலை எடுத்து - தலைகளைச் சுமந்து; இன்னமும் - மேலும்; மகளிர்த் தாழ்தியோ - பெண்களைக் கும்பிடுகிறாயா?

மாக்களை - என்பதில் உள்ள 'ஐ' அசை. யானைகளை நிலை கெடுத்தல் என்று நேரே பொருள் கூறினும் பொருந்தும். நேரும் நீ - பேசும் நீ - நேர்தல் - பேசுதல். சீர்சடகோபன் நேர்தல் ஆயிரத்து (திருவாய் / - 8-11) மகளிர்த் தாழ்தியோ - மகளிரால் இழிவுறுவையோ என்றும் கூறலாம். மாக்கள் - வீரர்கள் என்றும் கூறலாம். மகளிர்த் தாழ்தியோ; பெயரை ஓட்டிய ஒற்று (த்) பெயரை வேறுபடுத்தும் வேற்றுமையின் பணியைப் புரிகிறது. ஒற்றும் வேற்றுமை உருபாம் பெயர்ப்பின். இது உரைச் சூத்திரம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'You who boast, "I lifted the mountain and broke the strength
  2. of the beasts that guard the eight quarters" —
  3. you did not come near while the younger brother stood with his bow raised;
  4. and still you lift your heads only to bow down to women?'

What the poem says

Cītai mocks Irāvaṇaṉ's boasts that he lifted Kailāsam and humbled the elephants of the eight directions.

For all that, he did not dare approach her while Ilakkuvaṉ stood guard with his bow; he waited until both brothers were gone. And now this mighty hero carries his ten heads about only to bow them before a woman.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1malai eṭuttu eṇ ticai kākkum mākkaḷai
nilai keṭuttēṉ eṉum māṟṟam nērum nī
cilai eṭuttu iḷaiyavaṉ niṟkac cērntilai
talai eṭuttu iṉṉamum makaḷirt tāḻtiyō?