கம்பராமாயணம் 5240 · சுந்தர 4.124

Section சுந்தர காண்டம் / 4. காட்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1ஏழை! நின் ஒளித்துறை இன்னது ஆம் என
ஆழி எம் கோம் மகன் அறிய வந்த நாள்
ஆழியும் இலங்கையும் அழியத் தாழுமோ?
ஊழியும் திரியும்; உன் உயிரொடு ஓயுமோ?

பொருள் · Meaning in Tamil

ஏழை - அறிவற்றவனே; நின் ஒளித்துறை - உனது மறைந்து வாழும் இடம்; இன்னது ஆம் என - இந்த இலங்கை யாகும் என்று; எம் கோமகன் - எம்முடைய அரசன் (இராமபிரான்); அறிய வந்த நாள் - அறிய வரும்படியான நாளானது; ஆழியும் இலங்கையும் - கடலும் இலங்கை மாநகரமும்; அழிய - அழிந்து போவதுடன்; தாழுமோ - தணிந்து போகுமா; உன் உயிரொடு - உன் உயிரை அழிப்பதுடன்; ஓயுமோ - அமைதி பெறுமா (அதனால்); ஊழியும் - ஊழிக் காலமும்; திரியும் - மாறுபட்டு அழியும்.

இப்பாடலில் உள்ள நாள் என்பது எழுவாய். வரும் நாள், வந்த நாள் என்றது கால மயக்கம்; வருவது உறுதி பற்றி, இங்ஙனம் கூறுதல் தொல் மரபு (சிந்தாமணி 85) காலமே அனைத்தையும் செய்யும் என்று வாசிட்டம் விவரிக்கும் (வைராக்கியப் பிரகரணம்) காலத்தை எழுவாயாக்காமல், இராமபிரான் சீற்றத்தை வருவித்து அதனை எழுவாயாக்கினர். விரும்பின் ஏற்க. கோமகனை எழுவாயாக்கி, அவன் கடலும் இலங்கையும் அழிப்பதுடன் தணிவானா? உன் உயிரையும் அழிப்பதுடன் ஓய்வானோ (அவனால்) ஊழித்தீயும் வேகும், என்று வி.கோ. உரை வகுத்தார். இன்னது - இது. இன்னது கேண்மென இசைத்தல் மேயினார் (கந்தபுரா - 2 - 8-9) இவ்வினா அடுத்த பாடலிலும் தொடரும் - குளகம். வாழி - அசை.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'Fool! On the day our prince — long may he live — comes to know
  2. that this is where you hide away,
  3. will it stop once the ocean and Ilaṅkai are destroyed?
  4. Will it rest once your life is ended? The very age itself will be overturned!'

What the poem says

Cītai warns that once Irāmaṉ learns that Ilaṅkai is Irāvaṇaṉ's hiding place, the day of reckoning will not be satisfied with destroying the sea and the city, nor even with taking his life; the whole age of the world will be turned upside down.

The commentary notes that 'the day' is the grammatical subject, though some take Irāmaṉ's anger as the subject. The question runs on into the next verse.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1ēḻai! niṉ oḷittuṟai iṉṉatu ām eṉa
vāḻi em kōmakaṉ aṟiya vanta nāḷ
āḻiyum ilaṅkaiyum aḻiyat tāḻumō?
ūḻiyum tiriyum; uṉ uyiroṭu ōyumō?