கம்பராமாயணம் 5242 · சுந்தர 4.126

Section சுந்தர காண்டம் / 4. காட்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1அங்கண் மா ஞாலமும் விசும்பும் அஞ்ச வாழ்
வெங்கணாய்! புன்தொழில் விலக்க மேற்கொளாய்!
செங்கண் மால் நான்முகன் சிவன் என்றே கொலோ
எங்கள் நாயகனையும் நினைந்தது? ஏழை நீ!

பொருள் · Meaning in Tamil

அங்கண் மாஞாலமும் - அழகிய இடமுடைய பெரிய மண் உலகமும்; விசும்பும் - விண்ணுலகமும்; அஞ்ச - அச்சமடையும்படி, வாழ் - வாழ்ந்து கொண்டுள்ள; வெங்கணாய் - கொடியவனே, புன்தொழில் - அற்பத் தொழிலை; விலக்கி - ஒதுக்கிவிட்டு; மேற்கொளாய் - (யான் கூறுவதை) பின்பற்றுவாயாக; எங்கள் நாயகன் தனை - எங்கள் தலைவனான இராமபிரானையும்; செங்கண்மால் - சிவந்த கண்ணைப் பெற்ற திருமால்; நான்முகன் - நான்கு முகமுடைய பிரமன்; சிவன் - சிவபிரான்; என்றே கொல் நீ நினைந்தது - என்றோ நீ கருதியது (அதனால்); ஏழை - நீ அறிவற்றவனே.

இராமபிரானை மும்மூர்த்திகளைப் போல எளியர் என்று கருதியது அறியாமை. சடாயு, முத்தேவரின் மூல முதற் பொருளாம் அத்தேவர் இம்மானுடர் ஆதலினால் எத் தேவரோடு எண்ணுவது, என்று கூறினான் (கம்ப. 3410) 'முப்பரம் பொருளுக்கு முதல்வன்' என்ற பாசுரம் கருதுக (கம்ப. 313) தாங்கள் வழிபடும் தெய்வத்தை மும்மூர்த்திகளாகவும் மும்மூர்த்திகளாகவும் மும்மூர்த்திகளின் மேம்பட்டவனாகவும் பேசுவது மரபு. மூவர்க்கும் உன்றனக்கும் வழி முதலே என்பர் மணிவாசகர். (திருவாசகம் 379) பெரியாழ்வார் மூவர் காரியமும் திருத்தும் முதலவன் (நாவகாரியம்) என்றார். காரணகாரிய நிலைபற்றி இங்ஙனம் பேசப்படும். ஆழ்வார்களும் நாயன்மார்களும் கம்பரும் மயக்கமடையார்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'Cruel one, who live so that the wide, beautiful earth and the heavens fear you,
  2. give up your vile deeds and take up what I say!
  3. Did you think our lord too was just like red-eyed Māl,
  4. the Four-faced One or Civaṉ? You are a fool!'

What the poem says

Cītai tells Irāvaṇaṉ, who terrorises earth and heaven, to give up his base conduct.

He has made the mistake of thinking Irāmaṉ is merely on a level with the three great gods, Tirumāl, Piramaṉ and Civaṉ, whom he has defied before. In fact Irāmaṉ is the supreme being from whom all three arise, as Caṭāyu also declared earlier in the epic.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1aṅkaṇ mā ñālamum vicumpum añca vāḻ
veṅkaṇāy! puṉ toḻil vilakki mēṟkoḷāy!
ceṅ kaṇ māl nāṉmukaṉ civaṉ eṉṟē kolām
eṅkaḷ nāyakaṉaiyum niṉaintatu? ēḻai nī!