கம்பராமாயணம் 526 · பால 9.60
பாடல் · The poem
Tap a word to see where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
1அண்ட கோளகைப் புறத்தது ஆய், அகிலம் அன்று அளந்த
புண்டரீக மென் பதம் அத்து இடை பிறந்து, பூ மகனார்
கொண்ட தீர்த்தமாய், அரன் கொளப், பகிரதன் கொணர,
மண் தலத்து வந்து அடைந்தது; இம் மா நதி மைந்த!
பொருள் · Meaning in Tamil
திருமால் உலகம் அளந்த காலத்தில் அப்பரமன் திருவடி சத்தியலோகம் செல்லப் பிரமன் தன் கைக் கமண்டல நீர் கொண்டு அத்திருவடியைக் கழுவினான். அந்தப் புனித நீரே கங்கையாகியது என்பது. அக் கங்கையைப் பகீரதன் தவத்தால் பூவுலகு கொணர்ந்தான் என்றான் விசுவாமித்திரன்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Lying beyond the orb of the cosmic egg, born from the soft lotus-flower feet
- that once measured the universe,
- it became the sacred water the lotus-born god kept; and, brought down by Pakīrataṉ's penance,
- it came to the earth — this great river, my son!
What the poem says
Vicuvāmittiraṉ ends the story by telling Irāmaṉ where the river came from. When Tirumāl as Trivikrama measured the universe, his foot reached up to Brahmā's world. Brahmā washed it with water from his water-pot, and that holy water became the Gaṅgai. Pakīrataṉ's penance brought it down to earth.
ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1aṇṭa kōḷakaip puṟattatu āy, akilam aṉṟu aḷanta
puṇṭarīka meṉ malaraṭip piṟantu, pūmakaṉār
koṇṭa tīrttam āy, pakirataṉ tavattiṉāl koṇara,
maṇtalattu vantu aṭaintatu; im mā nati mainta!