கம்பராமாயணம் 5263 · சுந்தர 4.147
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
பழிப்பு இலாதாய்! - பழித்துப் பேசப்படாதவளே! சிற்றியல் - சிறுமைப் பண்பும்; சிறுமை ஆற்றல் - அற்பசக்தியும்; சிறுதொழில் - இழி தொழிலும் (பெற்று); மனிதரோடே - மனிதர்கள்பால்; முற்றிய தா இல் வீரம் - முதிர்ந்த குற்றமற்ற வீரத்துடன் கூடிய; முனிவு - கோபம்; என்கண் விளையாதேனும் - என்னிடம் தோன்றாது என்றாலும்; இற்றை இப்பகலில் - இன்றைய தினத்தில் இந்த முகூர்த்தத்தில்; நொய்தின் - எளிதாக; இருவரை - இராமலக்குவரை; ஒரு கையாலே - ஒரு கையாலே; பற்றினென் கொணருந்தன்மை - பிடித்துக் கொண்டு வரும் என் வலிமையை; காணுதி - பார்ப்பாயாக.
மனிதரோடு முனிவு என்கண் விளையாது என்று சேர்க்க. பகல் - முகூர்த்தம். பிறன் பழிப்பது இல்லாயின் நன்று - என்று குறள் (49) பேசிற்று. இராவணனே பிராட்டியைப் பழிப்பிலாதாய், என்றான். இராவணன், தன்னை மனிதனாக நினைந்ததே இல்லை. மனித குலத்தினும் மேம்பட்டது தன்குலம் என்று பேசுவதை யாண்டும் காணலாம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'Though no full-grown, flawless warrior's anger will ever arise in me
- against men of petty nature, petty strength and petty deeds,
- this very day, in this very hour, you will see me easily
- seize those two with one hand and bring them here, you who are beyond reproach!'
What the poem says
Irāvaṇaṉ boasts that he could never feel the righteous anger of a true warrior against such small-minded, weak men of lowly occupation; they are beneath it.
Still, he says, this very day he could catch both of them with one hand and haul them before her. Irāvaṇaṉ never thinks of himself as human and always ranks his own race above humankind. Ironically, he calls Cītai 'beyond reproach'.