கம்பராமாயணம் 5276 · சுந்தர 5.1
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
காண்டற்கு ஒத்த- பிராட்டியைக் காண்பதற்கேற்ற; காலமும் ஈதே - காலமும் இதுவேயாகும் (ஆனால்); தெறுகாவல் - வருத்துகின்ற பாதுகாப்பை (செய்ய); தூண்டற்கு ஒத்த - ஏவுதற்குப் பொருத்தமான; சிந்தையினார் - உள்ளம் உடையவர்கள்; துயில்கில்லார்- உறங்காமல் உள்ளனர்; வேண்ட - யான் மனத்தால் விரும்ப; துஞ்சார் - உறங்கார்; என்று - கருதி (அனுமன்); ஒரு - ஒப்பற்ற; விஞ்சை - ஒரு மந்திரத்தை; வினைசெய்தான் - தொழில்படச் செய்தான் (பிரயோகித்தான்); எல்லாம் - எல்லா அரக்கிகளும், மாண்டு அற்றார் என்றிட - இறந்து உயிரற்றவர் போல; மயர்வுற்றார் - மயக்கம் அடைந்தனர்.
தூண்டுதல், ஏவுதல், சிந்தை காவல் செய்யத் தூண்டுகிறது. வினை செய்தல், தொழிற்படுத்தல். அற்றார் - உயிரற்றவர்கள். அனுமன் “கல்லாத கலை இல்லை” என்று முன்பு பேசப்பட்டான். ஆதலின் மந்திரத்தால் அரக்கிகள் உறங்கச் செய்தான். மனோவாற்றலால் உறங்கச் செய்யமுடியும் என்பதை உலகம் இன்று காண்கிறது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- "This is the right time to meet her; but those whose minds
- are fit to drive on the cruel watch are not sleeping;
- they will not sleep just because I wish it," he thought, and worked a spell;
- and all of them swooned as if they had died and lost their life.
What the poem says
This verse opens the Episode of Showing the Form. Aṉumaṉ, hidden in the tree, sees that this is his chance to approach Cītai, but the watchful guards are still awake and will not drop off simply because he wants them to.
So he works a spell, and the demon women fall into a sleep so deep they seem dead. The commentary recalls that Aṉumaṉ was earlier praised as one who had mastered every art, magic included.