கம்பராமாயணம் 5277 · சுந்தர 5.2

Section சுந்தர காண்டம் / 5. உருக் காட்டு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

பல்நெடுநாளும்அழிவுற்றாள் - பலநாட்கள் துன்புற்ற பிராட்டி; துஞ்சாதாரும் - உறங்காத அரக்கிமார்கள்; துஞ்சுதல் கண்டாள் - உறங்குவதைப் பார்த்து; துயர் ஆற்றாள் - துன்பத்தைப் பொறுக்க முடியாமல்; நெஞ்சால் - உள்ளத்தால்; உய்வழி - தப்பிச் செல்லும் வழி; ஒன்றும் காணாள் - சிறிதும் அறியாமல்; நெகுகின்றாள் - மனம் நெகிழ்ந்து; அஞ்சா நின்றாள் - பயமடைந்து; எஞ்சா அன்பால் - குறையாத அன்புடன்; இன்ன பகர்ந்து - இவற்றைக்கூறி; ஆங்கு இடர் உற்றாள்- அங்கே துன்பம் அடைந்தாள்; பகர்தல் - மனத்துடன் பேசுதல்.

பிராட்டி, உறங்காத அரக்கிகள் உறங்குவதைப் பார்த்து வழியறியாமல் இவற்றைக் கூறித் துன்புற்றாள். கண்டாள், ஆற்றாள், காணாள், நெகுகின்றாள் முதலிய முற்றுக்கள் எச்சப் பொருளில் வந்தன. அழிவுறுவாள் - என்னும் வினையாலணையும் பெயர் எழுவாய். துஞ்சுதல் - உறங்குதல்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. She saw even the sleepless ones asleep; unable to bear her grief,
  2. finding in her heart no way at all to escape, she melted;
  3. fearful, worn down through many long days,
  4. with love that never lessened she said these things and suffered there.

What the poem says

Cītai notices that the guards who never sleep have suddenly fallen asleep. She does not know it is Aṉumaṉ's doing. Worn out by long days of captivity and seeing no way out, she pours out her grief, still full of undiminished love for Irāmaṉ.

The verses that follow are her lament, spoken to herself.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1tuñcātārum tuñcutal kaṇṭāḷ tuyar āṟṟāḷ
neñcāl oṉṟum uy vaḻi kāṇāḷ nekukiṉṟāḷ
añcā niṉṟāḷ pal neṭu nāḷum aḻivuṟṟāḷ
eñcā aṉpāl iṉṉa pakarntu āṅku iṭar uṟṟāḷ.