கம்பராமாயணம் 5282 · சுந்தர 5.7
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
(ஐயனே) தரு ஒன்றிய - மரங்கள் சேர்ந்துள்ள; கான் அடைவாய் - காட்டை அடைய விரும்புபவளே; நீ தவிர் - நீ அந்த எண்ணத்தை விடு; சில நாளினில் - சில தினங்களிலே; வருவென் - (நான்) திரும்பி வருவேன்; மாநகர்வாய் - பெரிய நகரின் கண்ணே; இரு - (அதுவரை) இருப்பாயாக; என்றனை - என்று கூறினாய்; இன் அருள் இதுவோ - உனது இனிய கருணை இப்படிப்பட்டதோ? ஒருவென் - தனித்துள்ள என்னுடைய; தனி ஆவியை - ஆதாரம் இல்லாத உயிரை; உண்ணுதியோ - உண்ணுகின்றாயோ.
அடைவாய் அடையும் சமயத்தில் என்றும் கூறலாம். 'நான் கானகம் வந்தால் துன்புறுவேன் என்று என் வருகையை மறுத்த நீ இன்று நான் சிறையில் இருக்கும் போது வாராமல் உள்ளாய். உன் அருள் இப்படிப்பட்டதோ' என்றாள். உயிர் உண்ணுதல் - உயிரை வாட்டுதல். உருக்கி என் உயிரொடும் உண்டு போனவன் (கம்ப. 533) என்று முன்பு பேசுகிறாள். இறைவனுக்கு உயிருண்ணி என்னும் பெயர் உள்ளதை அறிக. (திருவாசகம்) தான் - உரையசை.
ஆங்கிலம் · English translationAI
Translation
- When you were going to the tree-filled forest you said, "Give it up;
- I shall come back in a few days; stay
- in the great city!" Is this your sweet grace?
- Will you devour the lonely life of me, all alone?
What the poem says
Cītai recalls the day Irāmaṉ left for exile. He told her not to come, promising to return in a few days and asking her to stay in Ayōtti.
She contrasts that tender concern with his absence now that she is a prisoner, and asks whether this is his famous grace, to consume her solitary life. 'Devouring' a life means slowly wasting it. The commentary recalls her earlier words that he had melted and eaten her life, and notes that God is called 'eater of souls' in a devotional hymn.