கம்பராமாயணம் 5285 · சுந்தர 5.10

Section சுந்தர காண்டம் / 5. உருக் காட்டு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

மின்துன்னும் - மின்னலைஒத்திருக்கும்; மருங்குல் - இடையையும்; விளங்கு இழையாள் - விளங்கும் ஆபரணத்தையும் உடைய பிராட்டி; என்று என்று - என்று பலவாறு நினைந்து; உயிர் விம்மி - பெருமூச்சுவிட்டு; அழிவாள் - வருத்தம் அடைவாளாகிய பிராட்டி; இருந்து - உறுதிபெற்று; ஒன்று - என்னுடன் ஒன்றுபட்டுள்ள; என் உயிர் உண்டு எனின் - என் உயிர் இருந்தது என்றால்; இடர்உண்டு - துன்பம் உள்ளதாகும்; யான் - நான்; பொன்றும் பொழுதே - இறக்கும்சமயத்தில்தான்; புகழ் பூணும் - புகழ் என்னைச் சேரும்; எனா - என்று கருதி.

துன்னும் - உவமவாசகம் - வட நூலார் வேற்றுமை உருபை ஆர்த்தி என்றும் கூறுவர் (பிரயோக விவேகம்) இருந்து - வைராக்கியம் பெற்றது. இழையாள் அழிவாள் - அழிவாள் முற்றெச்சம். எனா - செயா எனும் வாய்பாட்டுச் சொல். என்று எனும் பொருள்தரும். “இறந்தால் துன்பம் நீங்கும் என்று நினைப்பது முறையல்ல” என்பதைப் பிராட்டியின் மூலம் அறிய இவ்வண்ணம் பேசப்பெற்றது போலும்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Saying such things again and again, sobbing from her very life, she sat wasting away,
  2. she of the waist like lightning and the shining jewels;
  3. "As long as this one life of mine remains, there is sorrow; only
  4. when I perish will I put on honour," she thought.

What the poem says

After her laments, Cītai, slender-waisted and bright with jewels, sits sobbing and comes to a grim resolve. As long as she stays alive there will be only sorrow and disgrace, she decides; only by dying can she win back her good name.

The commentary suggests the poet shows her reaching this thought so that the reader may learn, through her, that thinking death will end one's troubles is not the right way.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1eṉṟu eṉṟu uyir vimmi iruntu aḻivāḷ
miṉ tuṉṉum maruṅkul viḷaṅku iḻaiyāḷ
'oṉṟu eṉ uyir uṇṭu eṉiṉ uṇṭu iṭar: yāṉ
poṉṟum poḻutē pukaḻ pūṇum 'eṉā.