கம்பராமாயணம் 5286 · சுந்தர 5.11
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
அறை - ஒலிக்கின்ற; இருங்கழலவன் - பெரிய வீரக்கழல் அணிந்த இராமபிரானை; காணும் ஆசையால் - காண வேண்டும் என்னும் விருப்பத்தால்; பொறையிருந்து - பொறுமையுடன் இருந்து; ஆற்றி - அமைதிப்படுத்தி; என் உயிரும் - என்னுடைய உயிரையும்; போற்றினென் - (நீங்காதபடி) பாதுகாத்தேன். (ஆனால்); நிருதர் நீள் நகர் - அரக்கர்களின் பெரிய நகரில்; நிறை இரும் பல்பகல் - மிகுதியான பல நாட்கள்; சிறையிருந்தேனை - சிறையிலிருந்த என்னை; அப்புனிதன் - அந்த ஒப்பற்ற இராமபிரான்; தீண்டுமோ - தொடுவானோ.
சிறையிருப்புஇழிவாகக் கருதப் பெற்றது ஆதலின் பிராட்டி இப்படிப் பேசினாள். ஆனால் பிராட்டி இருப்பால் சிறை புனிதம் பெற்றது. இராமனைக் காணும் ஆசையால் உயிருடன் இருப்பதாகப் பேசினாள். “புண்ணிய மூர்த்தி தன்னைக் காணலாம் இன்னும் என்னும் காதலால் இருந்தேன்” - (கம்ப. 70653.) என்று பிராட்டி பின்பு பேசுவாள் போற்றுதல் - காத்தல். போற்றின் அரியவை போற்றல் (திருக்குறள் 6/3) ஆற்றி - அமைதிப்படுத்தி. இக்கலிவிருத்தம் விளம் - விளம் - மா- கூவிளம் என்னும் 4 சீர்களைப் பெற்றுவரும். இவ்விருத்தம் இந்நூலில் 2177 முறை காட்சி தருகின்றது (மணிமலர் 76)
ஆங்கிலம் · English translationAI
Translation
- Enduring with patience, I have kept my life too,
- out of longing to see him of the great ringing anklets;
- but me, who for many full days in the demons' wide city
- have stayed a prisoner, will that pure one ever touch?
What the poem says
The metre changes to the four-foot kalivirutham. Cītai says she has borne everything patiently and kept herself alive only in the hope of seeing Irāmaṉ, the hero with the warrior's anklets.
Now she fears that after living so many days as a captive in the demons' city, she has become unfit, and that he, the pure one, may not touch her again. The commentary adds that it is the prison that was made holy by her presence, not she who was stained by it.