கம்பராமாயணம் 5319 · சுந்தர 5.44

Section சுந்தர காண்டம் / 5. உருக் காட்டு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

அன்னையே ! - தாயே; வீங்கு - பூரிக்கின்ற; பணி அணை மிசை - பாம்புப் படுக்கை மேலே; தாங்கு அணை- நீரைத் தடுக்கும் கரையின் கண் உள்ள; பணிலமும் - சங்கையும்; வளையும் - சக்கரத்தையும்; தாங்கும் - ஏந்திய, நீர்மேகம் அன்னவன் - நீர் சுரக்கும் மேகம் போலும் இராமபிரானின்; பூங்கணைக் காற்கு - அழகிய கணைக்காலுக்கு; கணைக்கு ஆம் ஆவமோ - அம்புகட்கு இருப்பிடமாகிய தூணியோ; ஒரு பரிசு - ஒரு பண்பால்; பொரு ஆவது - ஒப்பாவது.

“கணைக் காற்கு, ஆவமோ பொரு ஆவது” என்று முடிக்க. ஆவம் - அம்பறாத்தூணி. பரிசு - தன்மை. இங்கு பரிசு என்றது மேலே விரிந்து கீழே சுருங்கியிருக்கை. அம்பறாத் தூணிக்கு வடிவ ஒப்புமையன்றி வேறுபண்பில்லை என்க.ஆவம் அழிக்கும் கணைகட்கு இருப்பிடம். இவன் கணைக்கால் ஆக்கும் திறம் பெற்றது. ஆதலால் ஒப்பாகா என்க. கணைக்காலுக்கு அம்பறாத்தூணி ஒப்பு. அம்புபெய் தூணி... போன்ற கணைக்கால் (உவமான. 12) தான் - அசை.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. He who holds the conch found on the shore that holds back the waters, and the discus,
  2. like a rain cloud upon the swelling serpent couch on the waters:
  3. for his lovely shins, can a quiver, home of arrows,
  4. be a match in more than one way? Mother!

What the poem says

Aṉumaṉ comes to Irāmaṉ's shins. He reminds Cītai who Irāmaṉ truly is: Viṣṇu, dark as a rain cloud, holding conch and discus as he reclines on the serpent couch upon the ocean.

Poets compare a shapely shin to a quiver, wide above and narrow below. But a quiver matches only in shape: it holds arrows that destroy, while his shins belong to one who saves. So the quiver is no true likeness either.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1tāṅku aṇaip paṇilamum vaḷaiyum tāṅku nīr
vīṅku aṇaip paṇimicai mēkam aṉṉavaṉ
pūṅ kaṇaikkāṟku oru paricutāṉ poru
ām kaṇaikku āvamō āvatu? aṉṉaiyē!