கம்பராமாயணம் 5320 · சுந்தர 5.45

Section சுந்தர காண்டம் / 5. உருக் காட்டு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

(ஐயனின் தொடைகள்) அறம் - அறத்தைப் போல, கிளர்- கிளர்ச்சி பெற்ற; பறவையின் அரசன் - பறவைகளுக்குத் தலைவனான கருடனின்; ஆடுஎழில் - வெற்றியும் அழகும்; பிறங்கு - விளங்கும்; எருத்து அணைவன - பிடரியை ஒத்திருப்பன; பெயரும் பொற்புடை - அசையும் அழகுடைய (அதைக்கண்டு); மறங்கிளர்- வீரம் கிளர் கின்ற; மதகரிக் கரமும் - மதயானைகளின் கைகள்; நாணின - உவமையாகாமல் நாணம் அடைந்தன (என்றால்); குறங்கினுக்கு - இராமபிரானின் தொடைகளுக்கு; உவமை - ஒப்புமையாகத் தக்க பொருள்கள்; இவ்வுலகில் கூடுமோ - இந்த உலகத்தில் கிட்டுமா?

இறைவனின்வாகனமான கருடனின் கழுத்தே பெருமான் தொடைகட்கு ஒப்பு. பிற ஒப்பாகா. கருடனின் கிளர்ச்சி தருமத்தின் கிளர்ச்சி போன்றது. கருடனின் கிளர்ச்சியை வேதாந்த தேசிகர் கருடதண்டகத்தில் பேசினார் கவிச்சக்கரவர்த்தி நாகபாசப்படலத்தில் இக்கிளர்ச்சியைப் பேசுவர் (கம்ப. 8244 - 49) குறங்கு - தொடை யானையின் தொடைக்கு உவமையாக்குவது மரபு பிறங்கு எருத்தில் இருந்து நீங்கி வந்த தொடை என்று பொருள் கூறினர் ஆய்க. இஃது தூரகை. வடநூலார் ‘தூராந்வயம்’ என்பர் “பிறங்கு எருத்து அணைவன குறங்கு” என்று கூட்டினர்

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. They are like the shining neck, victorious and lovely, of the king of birds
  2. who rises up like dharma itself; before their moving beauty
  3. even the trunks of fierce rutting elephants are put to shame:
  4. can any likeness for his thighs be found in this world?

What the poem says

Aṉumaṉ describes Irāmaṉ's thighs. The only fitting comparison is the powerful neck of Garuḍa, king of birds and Viṣṇu's mount, whose surging energy is like that of dharma itself.

The trunk of a war elephant, the usual likeness for a strong thigh, is put to shame beside them. Nothing else in the world will serve. The commentary notes that Kampaṉ describes Garuḍa's power at length later, in the episode of the serpent noose.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1aṟam kiḷar paṟavaiyiṉ aracaṉ āṭu eḻil
piṟaṅku eruttu aṇaivaṉa peyarum poṟpuṭai
maṟam kiḷar matakarik karamum nāṇiṉa
kuṟaṅkiṉukku uvamai iv ulakil kūṭumō?