கம்பராமாயணம் 5323 · சுந்தர 5.48

Section சுந்தர காண்டம் / 5. உருக் காட்டு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1நீடுறு கீழ்த்திசை நின்ற யானையின்
கோள்துறு கரம் எனச் சிறிது கூறலாம்
தோடு உறும் மலர் எனச் சுரும்பு சுற்று அறாத்
தாள்துறு தடக்கை வேறு உவமை சாலுமோ?

பொருள் · Meaning in Tamil

தோடு உறு - இதழ்கள்பொருந்திய; மலர்என - தாமரைப் பூ என்று கருத; சுரும்பு சுற்று அறா - வண்டுகள் மொய்ப்பது நீங்காத; தாள்தொடு தடக்கை - முழந்தாளைத் தீண்டும் கரங்கள்; கீழ் திசை நின்ற - கிழக்குத் திசையில் இருக்கும்; யானையின் - ஐராவதம் என்னும்யானையின்; கோடு உறு - தந்தங்களின்நடுவில் இருப்பதும்; நீடு உறு - நீண்டிருப்பதும் ஆன; கரம் என - துதிக்கைஎன்று; சிறிது கூறலாம் - ஒருபுடை பேசலாம்; வேறு உவமை - பிறஉவமைகள்; சாலுமே - போதுமானதாயிருக்குமோ.

யானையின் கரமேஒரு புடை ஒப்புமை எனின் மற்றவை முற்று உவமையாகுமோ கீழ்த்திசை - கீட்டிசை - ழகரம் டகரம் ஆயிற்று. பழைய வழக்கு. திகடரு சடைமுடி (சம்பந்தர் 344 - 10) வீரசோழிய வழக்கன்று. சாலுமே - ஏகாரம் ஐயப்பொருள்தந்தது. ஒருபுடை ஒப்புமை என்பர் அது இங்கு சிறிது என்று பேசப்பெற்றது. கிழக்குத் திசை யானை - ஐராவதம். முழங்கால் அளவு கை நீண்டிருத்தல் உத்தம இலக்கணம். தாள் தோய் தடக்கைத் ததை மாண் வழுதி (புறம் 59) இதனை வடநூல் ஆஜாநு பாஹ என்று பேசும். கோடுறு கரம் என்பதற்கு, வளைந்த கரம் என்றும் வரைகள் பொருந்திய கரம் என்றும் கூறலாம். கோள்துறு எனப்பிரித்து வலிமை மிக்க கரம் என்று உரை கூறியவரும் உளர். வரைகள் பெற்றிருத்தல், வளைந்திருத்தல் கொம்புகள் இடையே இருத்தல் உவமானக் குறைபாடு, ஆதலின் சிறிது கூறலாம் என்றான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. To the long trunk set between the tusks of the elephant
  2. that stands in the far eastern quarter, one may liken them a little;
  3. but the great arms that reach to the knees, round which bees never stop circling
  4. taking them for petalled flowers: would any other likeness do?

What the poem says

Aṉumaṉ comes to Irāmaṉ's arms, long enough to reach his knees, a classic mark of a great man. Bees hover round them, mistaking the hands for lotus flowers.

The trunk of Airāvatam, the elephant that guards the east, might match them in part, but only a little: a trunk is creased, curved and hangs between tusks. If even that is only a partial likeness, no other comparison will serve at all.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1nīṭuṟu kīḻt ticai niṉṟa yāṉaiyiṉ
kōṭu uṟu karam eṉac ciṟitu kūṟalām
tōṭu uṟu malar eṉac curumpu cuṟṟu aṟāta
tāḷ toṭu taṭakkai vēṟu uvamai cālumō?