கம்பராமாயணம் 5324 · சுந்தர 5.49
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
பச்சிலைத்தாமரை - பசிய இலைகளுடன் கூடிய தாமரை மலரை; பகல் கண்டால் என - சூரியனைப் பார்த்தாற் போல (மலர்ந்துள்ள), கை - (பெருமானின்) கைகள்; கனகன் என்பவன் -இரணியன் என்றுசிறப்பிக்கப்படுபவன்; வச்சிர யாக்கையை - வச்சிரம் போன்ற உடலை; வகிர்ந்த - பிளந்தன; வன்தொழில் - அந்தக் கொடுந்தொழில், நிச்சயம் - உறுதியாக நிகழ்ந்தது; அன்று எனின் - அச்செயல் உண்மையல்ல என்றால்; ஐயம் - அந்த ஐயப்பாட்டை; கைச்செறி - கையின்கண் செறிந்துள்ள; முகிழ் உகிர் - அரும்பு போன்ற நகம்; நீக்கும் - போக்கும்.
அமைதியானநிலையில் உள்ள பெருமானை நோக்குபவர்களுக்கு “இவனா மார்பைப் பிளந்தான்” என்று ஐயம் தோன்றும் அந்த ஐயத்தை விரல் நகம் போக்கும் என்க. சாந்தவடிவமான திருமாலை நோக்கும் போது ஆழ்வாருக்கே இவன் வயிரமார்பைப் பிளப்பானா என்னும் ஐயம் தோன்றிற்று. அவர் இவையா பிலவாய் திறந்து எரிகான்ற, இவையா எறிவட்டக் கண்கள், என்று ஐயுற்றார். (நான்முகம் 21) ஐயத்தைக் “கூருகிர் நீக்கும்” என்று குறித்தனர் கம்பநாடர். பாசுர விதை கற்பனைக்கு இடம் தந்தது. விரல் கூர்மையும் செந்நிறமும் பெற்றுள்ளது. ஆதலால் ஐயம் வேண்டாஎன்பது தற்குறிப் பேற்றம். நரசிம்மமே இராமன் என்பது குறிப்பு.
ஆங்கிலம் · English translationAI
Translation
- His hands are like green-leafed lotuses that have seen the sun;
- the bud-like nails set close on those hands, if anyone thinks the fierce deed
- of tearing apart the diamond-hard body of the one called Kaṉakaṉ
- did not really happen, will remove that doubt.
What the poem says
Aṉumaṉ describes Irāmaṉ's hands, like lotuses opening to the sun. Looking at so gentle a figure, one might doubt that he could ever have torn open the diamond-hard chest of Hiraṇyakaśipu, here called Kaṉakaṉ, as Viṣṇu did when he came as the Man-Lion.
But his sharp, red, bud-shaped nails settle the doubt. The hint is that Irāmaṉ is that same Narasiṃha. The commentary traces the idea to an Āḻvār who wondered whether such serene eyes could really have blazed with that fury.