கம்பராமாயணம் 5325 · சுந்தர 5.50

Section சுந்தர காண்டம் / 5. உருக் காட்டு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1திரண்டில ஒளியில திருவின் சேர்வில
முரண்தரு மேருவின் சிலையின் மூரிநாண்
புரண்டில புகழ் இல பொருப்பு என்று ஒன்றுபோன்று
இரண்டு இல புயங்களுக்கு உவமை ஏற்குமோ?

பொருள் · Meaning in Tamil

(தோள் மலைகள்போன்றது எனின்) பொருப்பு - மலைகள்; திரண்டில - திரட்சியைப் பெறவில்லை; ஒளி இல - ஒளியைப் பெறவில்லை; திருவின் சேர்வு இல - திருமகளின் சார்பு இல்லை; முரண்தரு - வலிமைமிக்க; மேருவில் முரிய - மேருவாகிய வில் இற்றுப் போக; மூரி நாண் புரண்டில - வலியநாண் புரளப் பெறவில்லை; புகழ்இல - புகழைப் பெறவில்லை; ஒன்று போன்று என்று - ஒன்று ஒன்றைப் போல; இரண்டில - இரண்டு கிடையாது; (ஆதலின் மலைகள்) புயங்களுக்கு - இராமபிரானின் தோள்களுக்கு; உவமை - ஒப்புமை; ஏற்குமோ - பொருந்துமோ ?

‘பொருப்பு, இல், புயங்களுக்கு உவமை ஏற்குமோ’ என்று முடிக்க. பொருப்பு - எழுவாய்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. They are not rounded, they have no lustre, Tiru does not dwell on them,
  2. no mighty bowstring has rolled over them as the stout Mēru bow snapped,
  3. they have no fame, and of mountains there are not two
  4. that are alike: can they be a likeness for his shoulders?

What the poem says

Mountains are the usual comparison for mighty shoulders, but Aṉumaṉ lists all the ways they fall short. They are not smoothly rounded and do not shine; the goddess of fortune does not rest on them.

No bowstring has rolled across them, as it rolled across Irāmaṉ's shoulders when he broke the great bow, likened to Mount Mēru itself, to win Cītai. They have no such glory, and no two mountains are a matched pair. So they cannot be a likeness.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1tiraṇṭila oḷi ila tiruviṉ cērvu ila
muraṇ taru mēruviṉ muriya mūri nāṇ
puraṇṭila pukaḻ ila poruppu eṉṟu oṉṟu pōṉṟu
iraṇṭu ila puyaṅkaḷukku uvamam ēṟkumō?