கம்பராமாயணம் 5327 · சுந்தர 5.52

Section சுந்தர காண்டம் / 5. உருக் காட்டு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

அண்ணல்தன்திருமுகம் - இராமபிரானின்திருமுகமானது; கமலம் ஆம் எனின் - தாமரையை ஒக்கும் என்றால்; கண்ணினுக்கு - அப்பெருமானின் கண்களுக்கு; உவமை - ஒப்புமையாக; வேறுயாது காட்டுகேன் - வேறு எதை எடுத்துக் கூறுவேன் (அன்றி); வெண்மதி - வானத்தில் உள்ள சந்திரன்; பொலிந்தது - பொலிவுடன் இருந்தது (எனினும் அது); மெலிந்து தேயும் - ஒளி குன்றி அழியும் (ஆதலினால்); (திருமுகம்) தண்மதி ஆம் என - குளிர்ந்த சந்திரன் போலும் என்று; உரைக்கத் தக்கதோ - கூறுதல் தகுதியுடையதா.

உரைத்தல்என்னும் தொழிற்பெயர் உரைக்க என்னும் எச்சம் போல் உள்ளது. பேசல் கூடாது என்பது பேசக்கூடாது என்று வருதலை நோக்கி அறிக. தொழிற் பெயர் எச்சம்போல் துலங்கலும் உளவே. (உரைச்சூத்திரம்) தண்மதி, சுட்டளவாக நின்றது. இனியர் புகழான்என்னும் பெயர்சொல்லுவான் குறிப்பால் அவன் என்னும் சுட்டுப்பெயர் மாத்திரை ஆயிற்று. என்றார். (சிந்தா - 6 உரை) அவர் கிளவியாக்கத்தில் 37 ஆம் சூத்திர விதிப்பாகக் கருதுவர் ஆல் - அசை

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. If the lord's sacred face is a lotus,
  2. what other likeness can I show for his eyes?
  3. Is it fit to call his face the cool moon,
  4. when the white moon, though it shines, wanes and wears away?

What the poem says

Aṉumaṉ comes to Irāmaṉ's face and eyes. If the face is compared to a lotus, then the lotus, the usual likeness for eyes, is already used up, and nothing is left for the eyes.

Nor can the face be called a moon, for however bright the moon is, it wanes and wastes away, while his face never loses its radiance.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1aṇṇaltaṉ tiru mukam kamalam ām eṉil
kaṇṇiṉukku uvamai vēṟu yātu kāṭṭukēṉ
taṇ mati ām eṉa uraikkat takkatō
veṇ mati polintatu melintu tēyumāl.