கம்பராமாயணம் 5329 · சுந்தர 5.54

Section சுந்தர காண்டம் / 5. உருக் காட்டு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

பல்லுக்கு உவமை - இராமபிரானுடைய பற்களுக்கு உவமைகள்; முத்தம் கொல்லோ - முத்துக்களோ; முழுநிலவின் - முழுமதியினுடைய; முறியின் திறனோ - துண்டுகளின் வகைகளோ; அமுதச் சொத்தின் - அமுதமாகிய செல்வத்தின்; துள்ளி - துளியும்; வெள்ளி இனம் - வெள்ளியின் கூட்டமும்; முறை - முறையாக; தொடுத்த கொல் - தொடுக்கப் பெற்றனவோ; துறை அறத்தின் - பல்வேறு வகைப்பட்ட அறத்தினுடைய; வித்து - விதையிலிருந்து; முளைத்த அங்குரங்கொல் - தோன்றிய முளைகளோ; மெய்முகிழ்த்த - சத்தியத்திலிருந்து தோன்றிய; தொத்தின் தொகைகொல் - பூங்கொத்தின் கூட்டமோ; வேறே சிலகொல் - இவற்றில் வேறுபட்ட சிலபொருள்களோ. யாது என்று - (இவற்றுள்) எது என்று; சொல்லுகேன் - கூறுவேன்.

இராமபிரான்பற்களுக்கு உவமைகள் முத்து முதலானவற்றுள் யாது என்று கூறுவேன். முறி - துண்டு. “நிலவின் வெண்முறி” (கம்ப. 4892) அறம் முப்பத்திரண்டு, பெருமான் பற்களும் முப்பத்திரண்டு ஒப்பிட்டுக் காண்க. மெய் - உண்மை. அறத்தின் வித்து என்றது அகிம்சையை. எல்லா அறங்களும் அகிம்சையடிப்படையில் தோன்றியன. அறத்துக்கு மூலம் அகிம்சை என்க. இப்பாடலில், அகிம்சையும் சத்தியமும் பேசப்பெற்றன. கொல்லோ - ஓ அசை. சொத்து - இது முதலில் பொன்னை உணர்த்திப் பின் செல்வத்தை உணர்த்திற்று. சொத்துற்று அமைந்த சுதை இல் நெடுஞ்சுவர் (பெருங்கதை /- 34-231) தொத்து - கொத்து துறையறம் - பல்வகைப் பிரிவுடைய அறம். அங்குரம் - முளை.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Are they pearls? Are they chips broken from the full moon? Are they drops
  2. of the treasure of nectar and a row of silver strung in order? Are they the sprouts
  3. that grew from the seed of dharma in all its branches? Are they something else? Are they
  4. a cluster of blossoms opened from truth? What shall I name as the likeness for his teeth?

What the poem says

The metre changes again. For Irāmaṉ's teeth Aṉumaṉ piles up possible likenesses: pearls, fragments of the full moon, drops of nectar, strung silver, sprouts from the seed of dharma, or clusters of buds blossoming from truth itself. He cannot decide which will do.

The commentary notes that there are said to be thirty-two kinds of dharma, matching the thirty-two teeth, and that the 'seed of dharma' here is non-violence, the root of all virtue, so that the verse joins non-violence and truth.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1muttam kollō? muḻu nilaviṉ muṟiyiṉ tiṟaṉō? muṟai amutat
cottiṉ tuḷḷi veḷḷi iṉam toṭutta kollō? tuṟai aṟattiṉ
vittu muḷaitta aṅkuramkol? vēṟē cilakol? meym mukiḻtta
tottiṉ tokaikol? yātu eṉṟu pallukku uvamai collukēṉ!