கம்பராமாயணம் 5330 · சுந்தர 5.55
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
(பெருமான் மூக்கைப்போன்று) எள்ளாநிலத்து - இகழ்ச்சியில்லாத பூமியில் தோன்றிய; இந்திர நீலத்து - இந்திர நீலக்கல்லில்; எழுந்த கொழுந்தும் - தோன்றிய முனையும்; மரகதத்தின் - மரகதமணியின்; விள்ளா - பிளவுபடாத; முழுமா நிழல் பிழம்பும் - முழுமையான பெரிய ஒளிப்பிழம்பும்; வேண்ட - (அன்பர்கள்) விரும்ப (அன்பர்களை); வேண்டும் - விரும்புகின்ற, மேனியதோ - அழகை உடையதோ ? கோபத்தை கெளவ வந்து - இந்திர கோபத்தைப் பற்றவந்து; சார்ந்த - பற்றிய; தள்ளா ஓதி அதுவும் - நீங்காத பச்சோந்தியும்; உவமை கொள்ளா - ஒப்பாதல் பொருந்தாத; வள்ளல் திருமூக்கிற்கு - பெருமானின் மூக்கிற்கு; பின்னும் - பிறபொருளும்; குணிப்பு ஆமோ - ஒப்புமை கூறுதல் ஏற்குமோ ?
கொழுந்தும்பிழம்பும் மேனியதோ - ஒருமை பன்மை மயக்கம். இந்திர நீலம் - பெருமான் திருமேனி. கொழுந்து மூக்கு. மரகதம் - பெருமான் திருமேனி. பிழம்பு - மூக்கு என்க. இந்திர கோபம் - அதரம். பச்சோந்தி மூக்கு. மூக்கு, கொழுந்தும் பிழம்பும் உவமையாகப் பிறர் கூற அதை விரும்பும் மேனியுடையதோ என்றும் கூறலாம். உரிய பொருள் காணல் அறிஞர் கடன். மூக்கிற்கு, இந்திர கோபத்தைக் கவ்விய ஓந்தியே ஒப்பாகாத போது பிறவற்றைக் கூறுதல் ஒவ்வா என்க. கோபம் - தம்பலப்பூச்சி
ஆங்கிலம் · English translationAI
Translation
- The tip that rises from a sapphire of a land beyond reproach, and the whole
- great unbroken mass of light of an emerald: do they have the beauty that devotees long for and that longs for them?
- And the chameleon that has come and fastened on a red velvet-mite to seize it:
- for the generous one's nose, which admits no likeness, can anything else be reckoned a match?
What the poem says
For Irāmaṉ's nose Aṉumaṉ tries a series of jewel-images. Imagine his dark body as a great sapphire and the nose as a point rising from it, or his body as a mass of emerald light and the nose as part of it.
Or think of a green chameleon reaching for a red velvet-mite: the chameleon would be the nose and the bright red insect his lips. Even that ingenious picture falls short, so no other comparison can serve. The commentary admits the verse is difficult and leaves the precise sense to the wise.