கம்பராமாயணம் 5339 · சுந்தர 5.64

Section சுந்தர காண்டம் / 5. உருக் காட்டு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

மீட்டும் உரைவேண்டுவன இல்லை என - திரும்பவும் யான் கூற வேண்டியவை இல்லை என்று; மெய்ப்பேர் தீட்டியது - உண்மைப் பேர் பொறிக்கப்பட்டதும்; தீட்டரிய செய்கையது - எழுத முடியாத வேலைப்பாடு பெற்றதும்; (ஆன) இது - இந்தத் திருவாழி; செவ்வே நீட்டு என - செவ்வையாய் அமைந்த திருமுகம் என்று கூறி; (இராமபிரான்) நேர்ந்தனன் - என்பால் வழங்கினான்; எனா - என்று கூறி (அனுமன்); நெடிய கையால் - நீண்ட கைகளில்; ஓர் ஆழி - ஒப்பற்ற மோதிரத்தை; காட்டினன் - காண்பித்தான்; அது - அந்த மோதிரத்தை; வாள் நுதலி - ஒளிமிக்க நெற்றியை உடைய பிராட்டி; கண்டாள் - பார்த்தாள்.

நீட்டு -திருமுகம் (கடிதம்) சித்திர சேனன் நீட்டு அவிழா (உபதேச காண்டம்; சிவத்துரோகம் 174) அமரர் கம்பனடிப்பொடி, 'நீட்டு' என்பதற்குக் குறிப்பு மொழி அடங்கிய ஓலை என்று பொருள் கூறிக் கல்வெட்டை ஆதாரம் காட்டுவர் அவர், “நீட்டோலை வாசியா நின்றான்... மரம்” என்னும் பாடலை மேற் கோள் நினைவு கூர்வர்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. "'Then no more words are needed,' he said; engraved with his true name,
  2. worked with craft beyond engraving, this is a fitting letter,
  3. he said as he gave it to me," and with his long hand
  4. he showed a ring; she of the shining brow saw it.

What the poem says

Having given the spoken tokens, Aṉumaṉ produces the decisive proof: Irāmaṉ's signet ring, engraved with his own name and finely wrought. Irāmaṉ had said that once she saw it, no further words would be needed; it would serve as his letter to her.

Aṉumaṉ holds it out in his long hand, and Cītai sees it. The word for 'letter' here, nīṭṭu, means a written message or palm-leaf missive.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'mīṭṭum urai vēṇṭuvaṉa illai 'eṉa mey pēr
tīṭṭiyatu tīṭṭu ariya ceykaiyatu cevvē:
'nīṭṭu itu! 'eṉa nērntaṉaṉ eṉā neṭiya kaiyāl
kāṭṭiṉaṉ ōr āḻi; atu vāḷ nutali kaṇṭāḷ.