கம்பராமாயணம் 5340 · சுந்தர 5.65

Section சுந்தர காண்டம் / 5. உருக் காட்டு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

இந் நல் நுதலிசெய்கை - அழகிய நெற்றியை உடையஇந்தப் பிராட்டியின் செய்கைக்கு; (உவமையாக) இறந்தவர் - நெறி கடந்து வாழ்ந்தவர்கள்; பிறந்த பயன் - பிறத்தலால் உண்டாகும் பயனை; எய்தினர் கொல் என்கோ - பெற்ற செய்கை என்று கூறுவேனோ; மறந்தவர் - தம்மையே மறந்தவர்கள்; அறிந்து - தம்மையும் தலைவனையும் அறிந்து; உணர்வு வந்தனர் கொல் என்கோ - பேருணர்வு பெற்ற செய்கை என்று கூறுவேனோ ? துறந்த உயிர் - உடலைவிட்டு நீங்கிய உயிர்; இடைவந்து - தக்க சமயத்தில் வந்து; தொடர்ந்தது கொல் என்கோ - ஒன்றுபட்டது என்று கூறுவேனோ ? திறம் - பிராட்டியின் தன்மையை; தெரிவது என்னை - அறிவது எப்படி.

எய்தினர் வந்தனர், என்னும் முற்றுக்கள் பெயரெச்சப் பொருள் தந்தது. இன்றேல் இரண்டு எழுவாயைச் சந்திக்க நேரும். இருவகை முற்று ஈரெச்சம் ஆகலும் (இலக்கணக் கொத்து 82) எய்திய செய்கை, வந்த செய்கை என அமையும். திருவாழியைக் கண்ட பிராட்டியின் செயல் 6 பாடல்கள் பேசும். மறந்தவர் - தம்மை மறந்தவர்கள். தம்மை மறந்தவர்கள், தம்மையும் தலைவனையும் அறிந்து பெறுவதே உணர்வு. பிறந்த பயன், என்பது பிறத்தலால் பெறவேண்டிய பயன் (தொல், சொல் 236) கொல், அனைத்தும் அசை.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Shall I say it was like the dead gaining the fruit of being born?
  2. Shall I say it was like those who had forgotten coming to know and regaining awareness?
  3. Shall I say it was like a life that had left returning in time and taking hold again?
  4. How can one tell what this lady of the lovely brow did!

What the poem says

The poet steps in to describe Cītai's reaction to the ring, and finds no adequate words. Was it like the dead winning the reward of a new birth? Like those lost in forgetfulness suddenly coming back to awareness? Like a departed life returning just in time to its body?

The commentary reads these images on a spiritual level too: the soul that has forgotten itself recovering knowledge of itself and of its Lord. This verse begins a run of six describing her response to the ring.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1iṟantavar piṟanta payaṉ eytiṉarkol eṉkō?
maṟantavar aṟintu uṇarvu vantaṉarkol eṉkō?
tuṟanta uyir vantu iṭai toṭarntatukol eṉkō?
tiṟam terivatu eṉṉaikol? in nal nutali ceykai!