கம்பராமாயணம் 5343 · சுந்தர 5.68
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
(பிராட்டிமோதிரத்தை) மோக்கும் - மோந்துபார்ப்பாள் (அதை); முலை வைத்து - தனங்களிலே வைத்து; உற முயங்கும் - நன்றாகத் தழுவிக் கொள்வாள்; ஒளிர் நல்நீர் - ஒளிர்கின்ற ஆனந்தக் கண்ணீர்; நிறை கண் இணை ததும்ப- அழகு நிறைந்த இரண்டு கண்களில் ததும்ப; நீக்கி - அதைத் துடைத்துக்கொண்டு; நெடு நீளம் நோக்கும் - நீண்ட பறவைக் கூட்டைப் பார்ப்பாள்; நுவலக் கருதும் - (பறவைக் கூட்டால் வந்த நினைவை) கூறநினைப்பாள்; ஒன்றும் நுவல்கில்லாள் - ஒன்றும் கூற முடியாமல், மேக்கு - மிகுதியாக; நிமிர் விம்மலள் - கிளர்ச்சி பெற்ற அழுகை உடையவளாய், விழுங்கல்உறுகின்றாள்- அதை அடக்க முயல்கின்றாள்.
நீளம் - பறவைக்கூடு. பறவைக் கூட்டை இராமபிரான் நோக்கியது ! நிந்தையில் சகுந்தங்கள் நீளம் நோக்கின. அநீதியை நோக்கினான், அறிவை நோக்கினான் (கம்ப. 2086) என்று பேசப்பெற்றது அஃது இப்போது பிராட்டிக்கு நினைவு வந்தது போலும். 'நெடுநீளம்நோக்கும்' என்பதற்குநெடுநேரம் மோதிரத்தைப் பார்ப்பாள் என்றும் உரை கொள்ளலாம். மாலைக் காலத்தில் பறவைகள் தம் கூட்டை அடைதலை நோக்கும் போது உணர்வு முகிழ்க்கும். பெருமான் என மகிழ்வதும், அல்ல என்று வருந்துவதும், ஆம் என்று ஊடுவதும், அல்ல என்று வாய் மூடுவதும் மோதிரத்தை விழுங்குவோம் என்பதும் பொருள். என்பது பழைய வுரை (அடை - பதி)
ஆங்கிலம் · English translationAI
Translation
- She smells it; she sets it on her breast and clasps it close; wiping away
- the bright, pure tears that brim in her full pair of eyes,
- she gazes long; she means to speak, but can say nothing;
- with sobs welling high she tries to swallow them down.
What the poem says
Cītai breathes in the ring's scent and clasps it to her breast. Tears of joy fill her eyes; she wipes them away and gazes for a long time. She wants to speak but no words come, and she tries to choke back the sobs rising in her.
The commentary reads 'gazes long' in two ways: she stares at the ring for a long while, or she looks at birds' nests, recalling a moment when Irāmaṉ watched birds returning to their nests. An old commentary says that she rejoices that it is her lord, grieves that it is not he, and almost wants to swallow the ring.