கம்பராமாயணம் 5344 · சுந்தர 5.69
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
நீண்ட விழிநேரிழைதன் - நீண்ட கண்களையும்அழகிய ஆபரணங்களையும் உடைய பிராட்டியின்; மின்னின் நிறம் எல்லாம் - மின்னல் போலப் பசலை படர்ந்த மேனி முற்றும்; ஒளிர்- விளங்குகின்ற; பொன் அனைய - பொன்னை ஒத்த; பொம்மல் நிறம் பூண்டது - பொலிவுடைய நிறத்தைப் பெற்றது; (இந்த மாற்றம்) மெய்யே - உண்மையே (ஆதலால்); ஆண் தகைதன் - ஆடவருள் தலைசிறந்த இராமபிரானின்; மோதிரம் - மோதிரம் ஆனது; அடுத்த பொருள் எல்லாம் - தன்னைச் சார்ந்த எல்லாப் பொருள்களையும்; தீண்டு அளவில் - தொட்ட மாத்திரத்தில்; வேதிகை செய் - பொன்னாக மாற்றுகின்ற; தெய்வமணி கொல் - தெய்வத்தன்மை பெற்ற ரச குளிகையோ.
வேதிகை செய்தல்- ஒரு பொருளை வேறு பொருளாக மாற்றுதல். பரிசவேதி செம்பைப் பொன்னாக்கும் என்பது சித்தரின் கொள்கை. இரச குளிகையினால் களிம்பு அற்றுப் பொன்னாய்ச் செம்பொனுடன் சேரும். (சிவ. சித்தி 11.2.9.) மின் நிறம் பொன்நிறம் ஆயிற்று. மோதிரம் பரிசவேதியோ என்று கவிச்சக்கரவர்த்தி வியக்கின்றார்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- All the lightning-pale colour of the long-eyed, jewelled lady
- took on a full, glowing hue like shining gold; it is true!
- Is the ring of the noblest of men a divine gem
- that, at a mere touch, transmutes everything that comes near it?
What the poem says
The pallor of separation had spread over Cītai's body, pale like lightning. Now, holding the ring, she glows with the rich colour of gold.
The poet wonders whether Irāmaṉ's ring is the philosopher's stone of alchemy, which turns base metal to gold at a touch. The commentary refers to the Siddha belief that such a stone turns copper into gold.