கம்பராமாயணம் 5369 · சுந்தர 5.94
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
ஆயானை - ஆகிய வாலியை, ஓர் அம்பினில் - ஒரு அம்பினாலே; ஆர் உயிர் வாங்கி - அரிய உயிரைக் கவர்ந்து; அன்பின் தூயான்வயின் - அன்பினாலே தூய சுக்கிரீவனிடத்து; அவ் அரசு ஈந்தவன் - அந்த அரசைக் கொடுத்த இராமபிரான்; (சுக்கிரீவனை) சுற்றும் சேனை மேயான் - சுற்றுகின்ற சேனையுடன் கூடியவனாய்; வருவான் என விட்டான் - வரும்படியாக என்று அனுப்பிவிட்டு; மேவுகாறும் - அவன் வரும் வரையிலும்; ஏயான் - அவனை ஏவிய இராமன்; திங்கள் இரண்டும் இரண்டும் - நான்கு மாதங்களும்; இடை - அந்த இருசிய முகமலையில்; இருந்தான் - தங்கியிருந்தான்.
இராமபிரான்ஆறுமாதம் பொறுத்திருந்ததாக ஒரு தனிப்பாடல் பேசுவதைஉலகம் அறியும். இராமன் 'இறையாறு திங்கள் இருந்தான் வாலிக்கிளையான்வரை' (பெருந் தொகை 1004) மழைக்காலத்தில் படையெடுப்புநிகழ்த்தக்கூடாது. சாதுர்மாசம் என்று பேசப்படும் விரதத்தை மேற்கொள்ளவேண்டும். சாதுர் மாசம் - நான்கு மாதம். சமணர்களும் பெளத்தர்களும் கூடஇவ்விரதத்தை அனுஷ்டித்ததாக வரலாறு பேசும். “பெருமான் சுக்கிரீவன்பால், திங்கள் நான்கில் விரசுக” என்று கேட்டுக் கொண்டதாகப் பேசப் பெற்றது(கம்ப. 4/138) அம்மலை என்பது பலர் அறிசுட்டு. முன்பு ஒன்றைக் கூறாமலேஇச்சுட்டு அமையும்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- He took that one's precious life with a single arrow, and gave
- that kingdom to the one pure in love; "Come with your army gathered round you,"
- he said, and sent him off; and until he came, he who had sent him
- stayed there for two months and two months more.
What the poem says
Aṉumaṉ completes the story of Vālī. With a single arrow Irāmaṉ took the life of this mighty monkey king and gave the throne to Cukkirīvaṉ, who loved him truly.
He then sent Cukkirīvaṉ to gather his army and waited on the mountain for four months, the rainy season, when military campaigns were not undertaken. The commentary notes that this four-month halt corresponds to the cāturmāsya, a rainy-season vow also kept by Jains and Buddhists.