கம்பராமாயணம் 5371 · சுந்தர 5.96
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
அன்பினன் - அன்புவடிவாய அனுமன்; இவ் உரை உணர்த்த - இந்த மொழிகளைக் கூற (அதனால்); துன்பமும் - (பெருமான் உற்ற அவலத்தால்) கவலையையும்; உவகையும் - (பெருமான் தன்பால் கொண்ட காதலை அறிந்தமையால்) மகிழ்ச்சியையும்; சுமந்த - தாங்கிய; உள்ளத்தாள் - இதயத்தை உடைய பிராட்டி; வன்பொறை - வலிமை மிக்க பொறுமை உடைய; நெஞ்சினன் ஆரியன் - இதயத்தை உடைய இராமபிரானின்; வருத்தம்உன்னுவாள் - துன்பத்தை எண்ண; என்பு உற உருகினள்- அத்துன்பம் எலும்பையும் தாக்க அதனால் கரைந்து; ஏங்கினள்- ஏக்கம் அடைந்தாள்.
உவகையும்துன்பமும் பிராட்டிபால் இருந்தது என்றான். இது கலவை மெய்ப்பாடு. இத்தகைய மெய்ப்பாட்டை உணர்த்துவதால் கவிச் சக்கரவர்த்தி உளவியலை வளப்படுத்துகிறார். என்புற உருகுதல், அனுபூதியின் முடிநிலை. கூம்பலங் கைத்தலத்து அன்பர் என்பூடுருகக் குவிக்கும் பாம்பலங்காரன் என்று கோவை பேசும். ‘என்பு எனக்கு உருகுகின்றது’ என்பான் அனுமன். ஆரியன் - மேலானவன். இராவணனும் இந்த அடைமொழி பெறுவான். குற்றாலத்தை ஆரிய நாடு என்று திரிகூடராசப்பர் பேசுவர் வன்பொறை நெஞ்சினன் - என்றது வன் பொறை நெஞ்சினன் ஆகி நம்மைக் கவனியான் என்று இருந்தோமே என்றது பழையவுரை (அடை - பதிப்பு) இவ்விருத்தம் விளம் - விளம் - மா- கூவிளம் என்னும் நான்கு சீர்களைப் பெற்று வரும். இத்தகு பாடல்கள் இந்நூலில் 2177 முறை கவிச்சக்கரவர்த்தியால் கையாளப்பட்டுள்ளன. (மணிமலர் 77)
ஆங்கிலம் · English translationAI
Translation
- As the loving one told her this account, she, thinking of the suffering
- of the noble one whose heart is strong in patience,
- melted to the very bones, pined and sighed,
- her heart bearing both sorrow and joy.
What the poem says
The metre returns to the four-foot kalivirutham. Hearing Aṉumaṉ's story, Cītai feels grief and joy at once: grief at all Irāmaṉ has suffered, joy at learning how deeply he loves her.
She melts to the very bones as she thinks of the pain of Irāmaṉ, whose heart is so strong in endurance. The commentary calls this a blend of emotions, and notes that 'melting to the bone' is the phrase devotional poets use for the height of spiritual experience. An old gloss adds that she had feared his patience meant he had forgotten her.