கம்பராமாயணம் 5372 · சுந்தர 5.97
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
நைஉறு சிந்தையள்- நைதல்பொருந்திய உள்ளத்தை உடைய பிராட்டி; நயன வாரியின் தொய்யல் - கண்ணீர்ப் பெருக்கின்; வெம் சுழியிடை - கொடிய சுழிகளுக்கு இடையே; சுழிக்கும் மேனியள் - சுழலும் மேனியை உடையவளாய்; (அனுமனை நோக்கி) ஐய ! - என் தந்தையே; நீ அளப்பரும் அளக்கர் - நீ அளவிட முடியாத கடலை; நீந்தினை எய்தியது - கடந்து வந்தது; எப்பரிசு - எந்த விதத்தால்; இயம்புவாய் என்றாள் - கூறுவாயாக என்று வினவினள்.
தொய்யல் -நீர்ப்பெருக்கு (அண்ணாமலை - பதி) உயர்வு நவிற்சியால் பிராட்டி கண்ணீர்ப் பெருக்கில் உண்டான சுழிகளில் தத்தளித்தாள். “கலங்கு தெண் திரையிற்றாய கண்ணின் நீர்க்கடலில் கண்டேன்” (கம்ப. 6041) என்று அனுமன் பெருமான்பால் பேசுவான். கடற்சுழி பட்டவர் போல் பிராட்டி தத்தளித்தாள் என்க.
ஆங்கிலம் · English translationAI
Translation
- With a melting heart, her body tossing in the cruel whirlpools
- of the flood from her eyes,
- she said, "Sir, you have swum across the measureless sea:
- in what manner did you come? Tell me!"
What the poem says
Cītai, her heart melting, is tossed about in the whirlpools of her own flood of tears, a deliberate exaggeration. Later Aṉumaṉ will tell Irāmaṉ he found her in a sea of her own tears.
Composing herself, she asks how he managed to cross the vast, measureless ocean to reach Ilaṅkai.