கம்பராமாயணம் 5381 · சுந்தர 5.106

Section சுந்தர காண்டம் / 5. உருக் காட்டு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

எழுந்து - நிமிர்ந்து; உயர் - உயர்கின்ற, நெடுந்தகை - பெருந்தகையான அனுமனின்; இரண்டு பாதமும் - இரண்டு திருவடிகளும்; அழுந்து உற - ஆழத்தில் புக; அழுத்தலின் - அழுத்திய காரணத்தால்; இலங்கை - இலங்கையானது; ஆழ் கடல் - ஆழமான கடலில்; விழுந்தது - மூழ்கியது; விரிந்த வெண்திரை - பரந்த வெண்மையான கடல் அலைகள்; நிலமிசை - பூமியின் கண்; தழைந்தன - பெருகின; மீனம் எலாம் - எல்லா மீன்களும்; புரண்டன - (அங்கங்கே) துள்ளின.

அனுமனின் திருவடிகள் அழுத்திய காரணத்தால் இலங்கை கடலில் மூழ்கியது. கடல் அலைகள் பூமியில் பெருகின. மீன்கள் துள்ளின. இது கற்பனை நிகழ்ச்சியன்று. நெடுந்தகை என்பதற்குச் சாமுண்டி தேவ நாயகர் அளத்தற்கரிய தன்மை உடையாய் என்று விளக்கம் செய்தார். 'அரவணையாய் என்னும் நெடுந்தகை நின்னையே யாம்' (புறப்பொருள் 191)

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. As the lofty, noble one rose up and pressed
  2. both his feet down so they sank deep, Ilaṅkai
  3. fell into the deep sea; over the land the wide white waves
  4. swelled up, and the fishes all leapt and tossed.

What the poem says

Aṉumaṉ, having found Cītai in the aśōka grove, has just grown to his cosmic form to prove to her that he is no ordinary monkey. As he straightens up, the sheer pressure of his two feet drives the island of Ilaṅkai down into the sea.

The ocean floods over the land and the fish are thrown about. The commentary insists this is meant as a real event within the story, not a mere fancy, and glosses 'the lofty one' as one whose greatness cannot be measured.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1eḻuntu uyar neṭuntakai iraṇṭu pātamum
aḻuntuṟa aḻuttaliṉ ilaṅkai āḻ kaṭal
viḻuntatu; nilamicai virinta veṇ tirai
taḻaintaṉa; puraṇṭaṉa mīṉam tām elām.