கம்பராமாயணம் 5382 · சுந்தர 5.107

Section சுந்தர காண்டம் / 5. உருக் காட்டு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

வஞ்சி அம்மருங்குல் - வஞ்சிக் கொடி போலும் இடையை உடைய; அ - அந்த; மறு இல் கற்பினாள் - குற்றமற்ற கற்பை உடைய பிராட்டி; கஞ்சம் புரைவன - தாமரை மலரை ஒத்தனவான; கழலும் - (அனுமனின்) திருவடிகளையும்; கண்டிலள் - கண்டாள் இல்லை (அவள்); அரக்கர் - அரக்கர்கள்; துஞ்சினர் - (இவனால்) இறந்தவராவார்; என்று உவக்கும் - என்று மகிழ்ச்சியடையும்; சூழ்ச்சியாள் - எண்ணத்தை உடையவளாய்; (அனுமனை நோக்கி) இவ் உரு - இந்த உருவத்தைக் கண்டு; அஞ்சினென் - அடக்கிக் கொள்க; என்றாள் - என்று கேட்டுக் கொண்டாள்.

அனுமனின் பேருருவின் மாட்சியை விளக்கக், கழலும் கண்டிலள் என்றான் கவிச்சக்கரவர்த்தி. கஞ்சமும் என்பதில் உள்ள உம் அசை. கஞ்சம் புரைவன என்க. களிறு சென்று களன் அகற்றவும் (புறம் 26)

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. She of the creeper-slim waist, she of flawless chastity,
  2. could not see even his feet, which were like lotuses;
  3. with the thought, rejoicing, 'the demons are as good as dead,'
  4. she said, 'I am afraid! Draw this form back in!'

What the poem says

Cītai looks at the giant Aṉumaṉ but his form is so vast that she cannot even see his feet. The poet uses this detail to convey the size of the form.

She is glad, because a being like this can surely destroy the demons, yet she is also overwhelmed, and she asks him to shrink back to a size she can look at.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1vañci am maruṅkul am maṟu il kaṟpiṉāḷ
kañcamum puraivaṉa kaḻalum kaṇṭilāḷ;
tuñciṉar arakkar eṉṟu uvakkum cūḻcciyāḷ
'añciṉeṉ! iv uru aṭakkuvāy! 'eṉṟāḷ.