கம்பராமாயணம் 5384 · சுந்தர 5.109

Section சுந்தர காண்டம் / 5. உருக் காட்டு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1ஆண்தகை அநுமனும் 'அருளதாம்! 'எனா
மீண்டனன் விசும்பு எனும் பதத்தை மீச்செல்வான்
காண்டலுக்கு உரியது ஓர் உருவு காட்டினான்;
தூண்டு அரு விளக்கு அனாள் இனைய சொல்லினாள்.

பொருள் · Meaning in Tamil

விசும்பு எனும் - ஆகாயம் என்று கூறப்படும்; பதத்தை மீச் செல்வான் - இடத்தையும் கடந்து மேலே செல்பவனான; ஆண்டகை அனுமனும் - ஆண்மை மிக்க அனுமனும்; (தான் கொண்ட பேர்உரு) அருளதாம் எனா - தங்கள் திருவுள்ளத் தருளின்படி என்று கூறி; மீண்டனன் - திரும்பி ஒடுங்கி; காண்டலுக்கு உரியது - காண்பதற்கு எளிதான; ஓர் உருவு காட்டினான் - ஒரு வடிவத்தைக் காண்பித்தான் (அப்போது); தூண்டல் இல் - தூண்டுதல் இல்லாத; விளக்கு அனாள் - விளக்கை ஒத்த பிராட்டி; இனைய சொல்லினாள் - இந்த வார்த்தைகளைக் கூறினாள்.

பிராட்டி அடங்குக என்று கூறிய ஆணையை அருள் என்றான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The manly Aṉumaṉ too, saying 'As you graciously wish,'
  2. drew back in, he who could go beyond the place called the sky,
  3. and showed a form that was fit to be looked upon;
  4. she, like a lamp that needs no trimming, spoke these words.

What the poem says

Aṉumaṉ, whose giant form had risen past the sky itself, treats Cītai's request as a gracious command and shrinks to a size she can see.

Cītai is compared to a lamp that burns steadily without anyone trimming its wick: her purity shines on its own. The next verses are her praise of Aṉumaṉ.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1āṇtakai anumaṉum 'aruḷatu ām! 'eṉā
mīṇṭaṉaṉ vicumpu eṉum patattai mīc celvāṉ
kāṇṭalukku uriyatu ōr uruvu kāṭṭiṉāṉ;
tūṇṭal il viḷakku aṉāḷ iṉaiya colliṉāḷ.