கம்பராமாயணம் 5385 · சுந்தர 5.110
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
காற்று ஆம் அன்ன - காற்றைப் போலும்; கடுமையாய் - வேகமுள்ள அனுமனே; (நீ) மலையோடும் - மலைகளுடனே; உலகை - உலகத்தை; இடந்தாய் - பெயர்த்து எடுத்தாய்; விசும்பை - ஆகாயத்தை, எடுத்தாய் - தூக்கினாய்; இவை சுமக்கும் - மலை முதலாய இவற்றைத் தாங்கும்; படம் தாழ் அரவை - படங்கள் வளைந்திருக்கும் ஆதிசேடனை; ஒரு கரத்தால் பறித்தாய் - ஒரு கரத்தால் களைந்தெடுத்தாய்; எனினும் - என்றாலும்; பயன் இன்று - (அவை உன் ஆற்றலுக்குத் தக்க பயன் இல்லை; இடையே - கடலின் நடுவில்; நடந்தாய் என்றாலும் - நடந்து வந்தாய் என்று பேசப்பட்டாலும்; (அது) நினக்கு நாணாம் - உனக்கு நாணத்தை உண்டாக்கும்; (அங்ஙனம் இருக்க) நளிர் கடலை - பெரிய கடலை (நீ) கடந்தாய் என்றால் - தாண்டினாய் என்றாலும்; என்னாகும் - அது உனக்கு எச்சிறப்பை உண்டாக்கும்.
இடத்தல் - பெயர்த்தெடுத்தல். எடுத்தல் - சுமத்தல். இடந்தது பூமி எடுத்தது குன்றம் (முதல் அந்தாதி 39) படம் தாழ் - படம் வளைந்த - தாழ்குரல் ஏனல் (புறப்பொருள் பெருந்திணை 10) காற்றாம் - ஆம் சாரியை. (வி.கேற கடுமையாய் - வேகம் உடையவனே. உன் சிறப்பு முற்றும் வெளிப்படுத்தற்கு உலகு இடத்தல் முதலானவை போதா. அனுமன் ஆற்றலுக்கு உலகை இடத்தல் முதலானவை சிறுசெயல். அவை பயனற்ற செயல். சிறந்த வீரம் அநியாயத்தை அழிக்கும் போதே பயனுடையதாகின்றது என்பது குறிப்பு. இவ்விருத்தம் மா-மா-காய்-மா-மா-காய் என்னும் 6 சீர்களை முறையே பெற்று வரும். இவ்விருத்தம் கம்பனால் //0 முறை கையாளப்பட்டுள்ளது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- You might tear up the world with its mountains, lift the sky, and with one hand
- pluck out the hooded serpent that bears them all, yet there would be no gain in it;
- even to say you walked across the middle would be a shame to you: and as for the cold sea,
- what is it to say you leapt across it? O you who are swift as the wind!
What the poem says
Cītai praises Aṉumaṉ. For someone of his power, even uprooting the earth, lifting the sky or pulling out Ātiśēṭaṉ, the serpent who holds up the world, would be small feats. Leaping across one ocean, then, is nothing much to boast of.
The commentary suggests the point is that real heroism is shown by destroying injustice, not by displays of strength. This verse begins a new metre, a six-foot viruttam.