கம்பராமாயணம் 5434 · சுந்தர 6.41

Section சுந்தர காண்டம் / 6. சூடாமணிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

கற்போயை - கற்புவடிவமான உன்னை; கைத்து ஓடும் சிறை - (கண்டவர்கள்) வெறுத்து ஓடும் சிறையில்; வைத்தோன் - சிறைவைத்த இராவணன்; இன்னுயிர் வாழ்வானாம் - இனிய உயிருடன் வாழ்ந்திருப்பானாம், ஓர் வில்லிகள் - ஒப்பற்ற வில்லேந்திய இராமலக்குவர்கள்; பொய்த்து - கடமையிலிருந்து தவறி; போவாராம் - திரும்பிப் போய் விடுவார்களாம்; இத்தோடு ஒப்பது - இதனை ஒக்கும் நிகழ்ச்சி; யாது உண்டு - யாது உள்ளது;

சிறையின் கொடுமையால் எவரும் அதைக் கண்டால் வெறுத்து ஓடுவர். கற்பு, ஓயை எனப்பிரித்து கற்பின் நெறியில் உள்ள அன்னை என்று பொருள் கொண்டு, என்னினிச் செய்வது எம் மோய் என்னும் பாடல் (கம்ப. 6034) மேற்கோள் காட்டப்பட்டது. அங்கு 'மோய்' என்பதே சொல். ஓய் அன்று. 'உன் மோயினி வருத்தமும்' என்றே குலசேகரர் பேசுவார் (பெருமாள் 99) பொய்த்தல் - தவறுதல், விண்நின்று பொய்ப்பின் - (குறள் 17) (அடை பதிப்பு) இராமபிரான், அரக்கர்களை அழித்து, அறத்தை நிலைநாட்டுவேன் என்று தண்டக வன முனிவர் பால் கூறியதைத் தவறிப் போகான் என்பது குறிப்பு. கைத்து ஓடும் சிறை என்பதற்குச் சிறைப்பட்டார் உயிர் வாழ்க்கையை வெறுத்த உடலை விட்டும் ஓடுதற்குக் காரணமான சிறை. என்று நயவுரை கூறுவாரும் உளர். கைத்து ஓடும் சிறை - உன் கற்புக்குப் பயந்துதானே வெறுத்து ஓடும் சிறை என்பது பழைய உரை. (அடை - பதி) இத்தோடு என்பதில் உள்ள ஓடு உருபு 'ஐ' உருபாகக் கொள்ளப் பெற்றது. செயப்படு பொருளாதலின் ஒத்தல் இரண்டன் உருபல்லவா?

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The one who put you, the chaste one, in a prison all flee from in disgust,
  2. he will live on with his sweet life!
  3. The archers will break their word and go away!
  4. Could anything be like this?

What the poem says

Aṉumaṉ continues in the same mocking tone. So Irāvaṇaṉ, who threw her into this hateful prison, is going to live on happily? And Irāmaṉ and Ilakkuvaṉ, the peerless archers, will break their word and go home?

Nothing could be more absurd. The commentary recalls Irāmaṉ's promise to the sages of the Daṇḍaka forest to destroy the demons and restore dharma.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1kaittu ōṭum ciṟai kaṟpōyai
vaittōṉ iṉ uyir vāḻvāṉām!
poyttōr villikaḷ pōvārām!
ittōṭu oppatu yātu uṇṭē?