கம்பராமாயணம் 5455 · சுந்தர 6.62

Section சுந்தர காண்டம் / 6. சூடாமணிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

நீர்த்து எழும் கணை - தன்மை உடையதாய் எழும் அம்புகளாகிய; மழை வழங்க - மழையைப் பொழிய (அதை); நீலவான் - நீலநிறமுடைய ஆகாயத்துக்கு; வேர்த்தது என்று - வியர்வை உண்டாயிற்று என்று; இடை இடை - இடை இடையே; வீசும் தூசு போல் - வீசுகின்ற ஆடையைப் போல; போர்த்து எழு - நெருங்கி எழுந்துள்ள; பொலங்கொடி இலங்கை - அழகிய கொடியைப் பெற்ற இலங்கையில், பூழியோடு - புழுதியுடனே; ஆர்த்து எழு கழுது - ஆரவாரித்து எழுகின்ற பேய்களை; இரைத்து - கொக்கரித்து; ஆட - ஆடுவதை; காண்டி - பார்ப்பாயாக.

ஆல் - அசை. பூழி - புழுதி. தூசு - ஆடை. மேக மண்டலம் வரை உள்ள கொடி என்க. கொடியாடிய இலங்கையில் பேயாடும் நிலை வரப் போகிறது. என்றதால் இலங்கையின் அழிவு பேசப்படுகிறது என்க.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. As the rain of arrows pours, so that, as if the blue sky
  2. were sweating, like a cloth flapping here and there,
  3. from Ilaṅkai of the golden banners, crowded and rising, along with the dust
  4. the ghouls will rise shrieking and dance and clamour; you will see it!

What the poem says

Aṉumaṉ pictures arrows pouring down like rain on Ilaṅkai. The city's banners, tall enough to reach the clouds, flap as if the sky were wiping off its sweat with a cloth.

Where banners once waved over a proud city, howling ghouls will soon dance in the dust.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1nīrttu eḻu kaṇa maḻai vaḻaṅka nīla vāṉ
vērttatu eṉṟu iṭai iṭai vīcum tūcu pōl
pōrttu eḻu polaṅ koṭi ilaṅkaip pūḻiyōṭu
ārttu eḻu kaḻutu iraittu āṭak kāṇṭiyāl!