கம்பராமாயணம் 5456 · சுந்தர 6.63
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
நீல்நிறம் - நீலநிறத்தைப் பெற்ற; அரக்கர் தம் - அரக்கர்களின்; குருதி நீத்தம் - இரத்த வெள்ளம், நீர் வேலை மிக்கு - நீரை உடைய கடலினும் மிகுந்து (அதனால்) அது; ஆற்றொடு மீள - ஆற்றுடன் திரும்ப (அதுபோல); வேலை சூழ் - கடலால் சூழப்பெற்ற, ஞாலம் முற்றுறு - உலகம் முடிவடையும்; கடையுகத்து - யுகத்தின் முடிவிலே (அனைத்தையும் உண்டு); நச்சு அறாக் காலனும் - கொலைவிடத்தன்மை நீங்காத யமனும்; வெறுத்து - (அரக்கரை உண்டு) தெவிட்டிப் போய்; உயிர்கால - உண்ட உயிர்களைக் கக்குதலைக்; காண்டி - காண்பாயாக.
கடலில் இரத்தவெள்ளம் அதிகரித்தது. அது ஆற்றுவழியாகத் திரும்பிற்று. அதுபோல் காலன் தெவிட்டியதால் உயிர்களைக் கக்கினான் என்க. கடல் ஆற்றின் வழியே இரத்தத்தை வெளியே தள்ளிற்று; யமன் வாய் வழியே உயிரைக் கக்கினான். உயிர்கால - பெருமூச்சுவிட. அதிகம் உண்டமையால் எமன் பெருமூச்சு விட்டான் என்பாரும் உளர். காலன் - யமனின் ஏவல் செய்வோன் என்பாரும் உளர். காலன் கூற்றத்திற்கு ஏவல் செய்பவனும் ஆம் என்று இனியர் வரைந்தார். (சீவக 1477) ஞான வாசிட்டம், காலன் எவற்றிற்கும் அடங்காதவன் என்று பேசும். நச்சு - விடம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The flood of blood of the dark demons, swelling over the watery sea,
- will flow back up the rivers; and at the last age, when the sea-girt
- world comes to its end, even Death, whose poison never fails,
- sickened, will spit out lives; you will see it!
What the poem says
Aṉumaṉ adds two more extravagant images. The demons' blood will overflow the sea and flow back up the rivers.
Death, the god Yama, will have eaten so many demon lives that he grows sick of them and spits them back out, like the sea pushing the blood back inland. The commentary notes another reading in which Death heaves a weary sigh.