கம்பராமாயணம் 5457 · சுந்தர 6.64
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
இளம் - இளம்பருவமுடைய; அணங்கு மகளிரொடு - தெய்வ மகளிர் போலும் பெண்களுடன்; அரக்கர் ஆடுறும் - அரக்கர்கள் நீராடும்; மணம் கிளர் - வாசனை மிகுந்த; கற்பகச் சோலை - கற்பகம் அமைக்கப் பெற்ற; வாவிவாய் - பொய்கையின் கண்ணே; குரங்கு இனம் - குரங்குக் கூட்டம், பிணங்குறு வால் - மாறுபட்டு வளைந்துள்ள வாலை; முறைபிடித்து - வரிசையாகப் பற்றிக்கொண்டு; மாலைய - வரிசைகளை உடையதாய்; கணங்கொடு - கூட்டத்தைச் சேர்த்துக் கொண்டு; குளிப்ப - நீராடுதலை; காண்டி - காண்பாயாக.
ஆல் - அசை. அரக்கர்கள் நீராடிய பொய்கையில் குரங்குகள் நீராடும் என்க. அரக்கர் ஆடுறும் கற்பகச் சோலை - வாவி. இதுவே தழாத தொடர். ஆடுறும் என்னும் எச்சம் சோலையைத் தழுவாமல் வாவியைத் தழுவிற்று. குடர் முறை முறை பிடித்து - கழுதினம் ஆடக் காண்டி என்று பாடம் கொண்டு, அரக்கர்களின் குடலைப் பிடித்தபடி பேய்கள் நீராடுவதைப் பார் என்று உரை கூறப் பெற்றது. பேய்கள் போர்க்களத்தில் ஆடுவதாகப் பேசப்படுவதே பெருவழக்கு.
ஆங்கிலம் · English translationAI
Translation
- In the pools of the fragrant wishing-tree groves where the demons
- sported with young women like goddesses,
- holding each other's twisted tails in a row, in garlands,
- in troops, the monkey bands will bathe; you will see it!
What the poem says
Aṉumaṉ pictures the monkeys taking over the demons' pleasure-gardens. In the pools of the wishing-tree groves where demon lords once bathed with their lovely women, the monkeys will splash about in troops, each holding the tail of the one in front.
The commentary mentions a variant reading in which ghouls bathe there holding the demons' entrails.