கம்பராமாயணம் 5458 · சுந்தர 6.65
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
பல செப்புறல் - பலவற்றைக் கூறுவதால்; என் - என்ன பயன் விளையும்; தெய்வ வாளிகள் - (இராமபிரானின் கடவுள் தன்மை பெற்ற அம்புகள்; இப்புறத்து - இந்த உலகில் உள்ள; அரக்கரை முருக்கி - அரக்கர்களை அழித்து; ஏனை - அப்பாலும் போய்; புறத்து - வெளியில் உள்ள; முவ்வுலகையும் - மூன்று உலகங்களையும்; முடிக்க - தாக்குவதாலே; அப்புறத்து அரக்கரும் - அந்தப் பக்கத்தில் உள்ள அரக்கர்களும்; அவிய - அழிவதை; காண்டி - பார்ப்பாயாக.
இராமபிரானின் அம்புகள் இந்த உலக அரக்கர்களைக் கொன்று அப்பாலும் போய் முட்டுவதால் அப்பக்கத்தில் உள்ள அரக்கர்களும் அழிவதைப் பார்ப்பாயாக. தெய்வ வாளி - என்பதற்கு விதிபோலும் அம்பு என்றும் பொருள் கூறலாம். தெய்வ வாளி ஆகையால் தீயவர் உள்ள இடத்தை அறிந்து அவர்களைத் தண்டித்தன. முட்டல் - தாக்குதல். ஏனை என்னும் முற்று வினை எச்சப் பொருளில் வந்தது. ஆல் - அசை.
ஆங்கிலம் · English translationAI
Translation
- What use in saying much? The divine arrows
- will crush the demons on this side, and then
- strike against the three worlds beyond to finish them,
- so that even the demons on that side perish; you will see it!
What the poem says
Aṉumaṉ ends his vision of the war. Irāmaṉ's divine arrows will not stop with the demons of Ilaṅkai. They will fly on through the three worlds and hunt down the demons hiding there too.
The commentary explains that because the arrows are divine, like fate itself, they know where the wicked are.