கம்பராமாயணம் 5459 · சுந்தர 6.66

Section சுந்தர காண்டம் / 6. சூடாமணிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1ஈண்டு ஒருதிங்கள் நீ இடரின் வைகவும்
வேண்டுவது அன்று; யான் விரைவின் வீரனைக்
காண்டலே குறை; பின்னும் காலம் வேண்டுமோ?
ஆண்தகை இனி ஒருபொழுதும் ஆற்றுமோ?

பொருள் · Meaning in Tamil

(தாயே) நீ - நீ; ஈண்டு - இந்த இலங்கையில், ஒரு திங்கள் - ஒரு மாதம்; இடரின் - துன்பத்திலே; வைகுதல் வேண்டுவது அன்று - தங்கியிருக்க வேண்டாம்; யான் - நான்; விரைவின் - வேகமாக; வீரனைக் காண்டலே - இராமபிரானைப் பார்ப்பதுதான்; குறை - எஞ்சியுள்ள செயல்; பின்னும் - கண்ட பிறகும்; காலம் வேண்டுமோ - இங்கு வர நல்லகாலம் பார்ப்பானோ?; ஆண்டகை - ஆடவருள் சிறந்த பெருமான்; இனி - இனிமேல்; ஒரு பொழுதும் - ஒரு கண நேரமும்; ஆற்றுமோ - பொறுத்திருப்பானோ (பொறான்);

கேட்காததே குறை. கேட்டால் யாவும் வழங்குவான் என்று நாட்டுப்புறத்தில் பேசப்படுவதைக் கேள்விப்படாதவர் யாவர் அங்குள்ள குறை இங்கு நினைக்கவும். குறை - எஞ்சியிருப்பது. காலம் வேண்டுதல் - நல்ல காலத்தை அவாவிச் சும்மா இருத்தல். வள்ளுவர் காலம் கருதி இருத்தல் என்பர். இராமன், பிராட்டி நிலை கேள்வியுற்றதும் விரைந்து வருவான்; காலம் பாரான் என்று அனுமன் குறித்தனன். காலத் தாழ்ச்சியை மக்கள் 'மேஷ ரிஷபம்' பார்த்தல் என்பர். ஆண்டகை - ஆடவருள் தகுதி வாய்ந்தவன். வடநூலார் புருஷோத்தமன் என்பர். நம்பி என்பதும் அது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. There is no need for you to stay a month here
  2. in this suffering; all that remains is for me to see the hero quickly;
  3. after that, will he need more time?
  4. Will the noble one bear it for a single moment more?

What the poem says

Aṉumaṉ assures Cītai that she will not need to wait a full month. The only thing left is for him to reach Irāmaṉ.

Once Irāmaṉ hears of her plight he will not wait for an auspicious moment or delay at all. He will set out at once.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1īṇṭu oru tiṅkaḷ iv iṭariṉ vaikavum
vēṇṭuvatu aṉṟu; yāṉ viraiviṉ vīraṉaik
kāṇṭalē kuṟai; piṉṉum kālam vēṇṭumō?
āṇtakai iṉi orupoḻutum āṟṟumō?