கம்பராமாயணம் 5468 · சுந்தர 6.75

Section சுந்தர காண்டம் / 6. சூடாமணிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

ஆக - இவ்வாறாக, ஆசுஇல - குற்றம் இல்லாத; இம்மொழி கேட்டு - (அனுமன் கூறிய) இந்த மொழியைக் கேட்டு; தோகையும் - சீதா பிராட்டியும்; அறிவுற்றாள் - அறிவில் தெளிவுபெற்று (அதனால்); ஓகை கொண்டு - அன்புற்று; களிக்கும் மனத்தள் - மகிழ்ச்சி பெற்ற உள்ளமுடையவளாய், உயர்ந்தாள் - சிறப்புப் பெற்று; இவன் - இந்த அனுமன்; போகை நன்று - (இராமபிரான்பால்) செல்வது சிறந்தது; என்பது - என்னும் எண்ணத்தை, புந்தியில் வைத்தாள் - அறிவில் நிலை நிறுத்தி, இன்னன - இப்படிப்பட்ட; சிலவாசகம் - சில மொழிகளை; சொன்னாள் - கூறினாள்.

உவகை என்பது ஓகை என்று மருவிற்று. உவகை - அன்பு. அச்சமும் உவகையும்... நிமித்தமும் என்னும் புறத்திணைப் பகுதிக்கு (36) நச்சர் வழங்கிய உரை காண்க. அவர் உவகை - அன்பு என்று வரைந்தார். தோகையும் என்பதில் உள்ள 'உம்' அசை. இக்கலித்துறை மா - விளம் - விளம் - விளம் - மா என்னும் சீர்களைப் பெற்று வரும். இத்தகு பாடல்கள் இந்நூலில் 1223 உள்ளன.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Hearing these flawless words, she understood;
  2. her heart rejoiced with gladness and she revived;
  3. she settled in her mind that it was good for him to go;
  4. and the peacock-like one spoke a few words such as these.

What the poem says

Cītai is reassured by Aṉumaṉ's words. Her spirits revive, and she now agrees that the best course is for him to return to Irāmaṉ at once.

She is called a peacock for her grace. She now speaks a few words to send with him. The metre changes to kalitturai, a five-foot form.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1āka immoḻi ācu ila kēṭṭu aṟivuṟṟāḷ
ōkai koṇṭu kaḷikkum maṉattavaḷ uyntāḷ
pōkai naṉṟu ivaṉ eṉpatu puntiyiṉ vaittāḷ
tōkaiyum cila vācakam iṉṉaṉa coṉṉāḷ.