கம்பராமாயணம் 5470 · சுந்தர 6.77
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
மேல்நாள் - முன்பு ஒருநாள்; நாகம் ஒன்றிய - வானம் அளாவிய; நல்வரையின் தலை - நல்ல சித்திரகூட மலையில்; வந்து - ஓர் பக்கத்தில் வந்து; எனை - என்னுடைய; ஆகம் - உடலை; அள் உகிர் வாளின் - கூரிய நகமாகிய வாளினால்; அளைந்த - கிளறிய; காகம் ஒன்றை - ஒரு காகத்தை, முனிந்து - கோபித்து; கல் அயல் - கல்லின் பக்கத்தில்; எழு புல்லால் - முளைத்த புல்லாலே; வேக வெம்படை - வேகமான கொடிய பிரம்மாத்திரத்தை; விட்டது - ஏவிய செய்தியை; மெல்ல விரிப்பாய் - மெதுவாகக் கூறுவாயாக.
காக்கையின் கொடுஞ்செயலை இராமபிரான் அடையாளமாகக் கூறியதைப் பெரியாழ்வார் பேசினார். அது பிராட்டி கூறியதாக அமைக்கப்பெற்றது.
சித்திரகூடத்து இருப்பச் சிறுகாக்கை முலைதீண்ட அத்திரமே கொண்டெறிய அனைத்துலகும் திரிந்தோடி வித்தகனே இராமாவோ நின் அபயம் என்றழைப்ப அத்திரமே அதன்கண்ணை அறுத்ததும் ஓர் அடையாளம்.
என்று பெரியாழ்வார் திருமொழி பேசும் (3.10.6) காட்சிப்படலத்தில் (கம்ப. 5096) இந்த நிகழ்ச்சியைப் பிராட்டி நினைந்ததாகப் பேசப்படுகிறது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Long ago, on the top of the good hill that touches the sky,
- a crow came and scratched my body with the sword of its sharp claws;
- how he grew angry with it and, with a blade of grass that grew beside a rock,
- let fly a swift and deadly weapon, tell him gently!
What the poem says
Cītai gives the first secret token. On Mount Citrakūṭa a crow once attacked her and tore her body with its claws.
Irāmaṉ, enraged, picked up a blade of grass and turned it into a divine missile, the Brahmāstra. The commentary quotes Periyāḻvār's hymn, which tells how the terrified crow fled through all the worlds before begging Irāmaṉ for mercy and losing an eye.