கம்பராமாயணம் 5471 · சுந்தர 6.78
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
மெய்ம்மை தொடர்ந்தோய் - உண்மை நெறியில் இயங்கும் அனுமனே; என் - என்னுடைய; ஓர் இன் உயிர் - ஒப்பற்ற இனிய உயிர் போன்ற; மென்கிளிக்கு - மென்மையான கிளிப்பிள்ளைக்கு; யார் பெயர் ஈகேன் - எவருடைய பெயரை இடுவேன்; மன்ன - அரசே!; என்றலும் - என்று யான் கூறியதும் (சீதையே); மாசு அறு - குற்றம் அற்ற; என் அன்னை - என்னுடைய தாயாகிய; கேகயன் மாது - கேகய வேந்தன் புதல்வியாகிய கைகேயியின்; பெயர் ஆக - பெயர் அமைக; என - என்று; அன்பினொடு - அன்பினுடன்; அந்நாள் - அக்காலத்தில் (இராமபிரான்); சொன்ன மெய்மொழி - கூறிய மெய்ம்மையான வார்த்தையை; சொல்லுதி - சொல்வாயாக.
அனுமன் உண்மை பேசுபவன் என்று பிராட்டி கூறியது திருவடியின் கலத்தை உணர்ந்தமையால் என்க. இராமபிரான் சிற்றன்னை பால் கொண்ட பேரன்பை நினைவு கூர்ந்தாள். ஈகேன் - வழங்குவேன். பெயரிடுதலை ஈதல் என்பது மரபு போலும். 'இராமன் எனப் பெயர் ஈந்தனன்' என்று (கம்ப. 296) பாலகாண்டம் பேசும். பேரறியாத பெரும் பொருளுக்குப் பெயர் வைத்தல் தொண்டரின் உரிமை.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'For my one dear soft parrot, sweet as life, whose name shall I give it,
- O king?' When I said this, 'Let it bear the name of my mother,
- the flawless daughter of the Kēkaya king!' Those true words he spoke
- with love that day, tell him, you who follow truth!
What the poem says
Cītai gives a second private token. When she asked Irāmaṉ what to name her pet parrot, he lovingly answered that it should be called after his stepmother Kaikēyi, princess of Kēkaya.
The detail shows his affection for Kaikēyi, who would later have him exiled. The commentary notes that naming something is spoken of as 'giving' a name.