கம்பராமாயணம் 5472 · சுந்தர 6.79

Section சுந்தர காண்டம் / 6. சூடாமணிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1என்று உரைத்து இனி இத்தனை பேர் அடையாளம்
ஒன்று உணர்த்துவது இல் என எண்ணி உணர்ந்தாள்
தன் திரு துகிலில் பொதிவுற்றது தானே
வென்றது அச்சுடர் மேலொடு கீழ் உற மெய்யால்.

பொருள் · Meaning in Tamil

என்று உரைத்து - என்று கூறி (பிறகு பிராட்டி); இத்தனை பேர் அடையாளம் - இவ்வளவு பெரிய அடையாளம்; இனிது - இனிமையானது (இனி); உணர்த்துவது - கூறக்கூடிய செய்தி; ஒன்று இல் - வேறு ஒன்று இல்லை; என - என்று; எண்ணி - கருதி; தன் - தன்னுடைய, திருத்துகிலில் - அழகிய சேலையில்; பொதிவுற்றது - முடிந்து வைக்கப்பெற்றதும்; மேலொடு கீழ் - விண்ணுலகத்திலும் மண்ணுலகத்திலும்; உற - நன்றாக; மெய்யால் - தன்னுடைய மேனியால்; தானே - தான் ஒன்றியாகவே; அச்சுடர் வென்றது - அந்தச் சூரியனை வென்றதுமாகிய சூடாமணியை, உணர்ந்தாள் - (அனுமன் பால் வழங்க வேண்டும் என்று) அறிந்தாள்.

வாயால் கூறவேண்டிய அடையாளம் போதும். இனி கண்ணால் காண வேண்டிய அடையாளம் வழங்க எண்ணிய பிராட்டி சூடாமணியை அனுமன் பால் வழங்கக் கருதினாள். அனுமன்பால் சூடாமணி வழங்க வேண்டும் என்று அறிந்தாள். உணர்தல் - அறிதல்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Having said this, she thought that no other token
  2. so great and sweet could tell him as much, and she recalled
  3. what was knotted in her sacred garment, which by itself
  4. outshone that sun, lighting above and below with its body.

What the poem says

Having given spoken tokens, Cītai decides Aṉumaṉ should also carry something visible. She remembers the jewel she has kept knotted into the end of her sari.

This is the cūṭāmaṇi, a crest-jewel worn in the hair, which gives this canto its name. Its own radiance outshines the sun, lighting heaven and earth.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1eṉṟu uraittu iṉitu ittaṉai pēr aṭaiyāḷam
oṉṟu uṇarttuvatu il eṉa eṇṇi uṇarntāḷ
taṉ tiru tukilil potivuṟṟatu tāṉē
veṉṟatu accuṭar mēloṭu kīḻ uṟa meyyāl.