கம்பராமாயணம் 5473 · சுந்தர 6.80

Section சுந்தர காண்டம் / 6. சூடாமணிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

(பிராட்டி) (சூடாமணியை) தன் - தன்னுடைய; மலர்க்கையில் - மலர் போன்ற கைகளில்; வாங்கினாள் - எடுத்தாள்; மன்னனை முன்னா - இராமபிரானை எண்ணி; ஏங்கினாள் - ஏக்கமுற்றாள்; அனுமனும் - (அது கண்ட) திருவடியும்; இது - பிராட்டியின் கையில் உள்ள இப்பொருள்; என்கொல் என்னா - யாதோ என்று; வீங்கினான் - உடல் பூரித்தான்; வியந்தான் - ஆச்சரியப்பட்டான் (அப்போது) (மணியின் ஒளியால்); உலகு ஏழும் விழுங்கி - ஏழு உலகங்களையும் உட் கொண்டு; தூங்கு - உறங்குகின்ற; கார் இருள் முற்றும் - கரிய இருள் முழுவதும்; சுற்றும் - சுற்றுப் புறங்களில்; இரிந்தது - ஓடிப்போயிற்று.

மன்னன் என்றது இராமபிரானை. 'இந்தச் சூடாமணி என்னால் மிகவும் போற்றிப் பாதுகாத்து வைக்கப்பட்டிருந்தது. துக்கம் உண்டாகும் போது இதைக் கண்டு உன்னைக் கண்டவள் போல மிகவும் களிக்கின்றேன்' என்று பிராட்டி பேசியதாக வான்மீகம் பேசும். அதைக் கருத்திற் கொண்ட கவிச்சக்கரவர்த்தி 'மன்னனை முன்னா ஏங்கினாள்' என்றார். மன்னன் என்றது 'சனகன்' என்றும், தசரதன் என்றும் கூறலாம் என்பர். சனகன் சூடாமணி வழங்கியவன்; தசரதன் அந்த மணியைப் போற்றியவன் என்பர். இருள் உறங்குவதாகக் கூறும் மரபு உண்டு போலும். 'நெடுந்தூங்கிருள்' (கம்ப. 9087) தூங்கிருள் வெய்யோற்கு ஒதுங்கிப் புக்கருந்தான் அன்ன பொழில் (நளவெண்பா. சுயம் 22) தூங்கு இருள், தொங்கும் இருள் என்று உரை கூறப் பெற்றது. தூங்கிருள் - செறிந்த இருள் என்று புறப்பாட்டுரை கூறும். துயில் மடிந்தன்ன தூங்கிருள் - (புறம் /26) இருள்தூங்கு இறுவரை (கலி - குறிஞ்சி?) இருள் தூங்கு சோலை. (கலி - குறிஞ்சி 14) இனியர் 'செறிந்த' என்று உரை வகுத்தார்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. She took it into her flower-like hand; thinking of the king,
  2. she sighed; and Aṉumaṉ, 'What can this be?'
  3. swelled with wonder and marvelled; the black darkness that had swallowed the seven worlds
  4. and lay sleeping fled away all around.

What the poem says

Cītai takes out the jewel and sighs as she thinks of Irāmaṉ. Aṉumaṉ swells with wonder at it.

The jewel's light is so bright that the darkness, which had swallowed the worlds and lay asleep, flees in every direction. The commentary recalls that in the Sanskrit Rāmāyaṇa Cītai says she looked at this jewel in her grief as if seeing Irāmaṉ.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1vāṅkiṉāḷ taṉ malarkkaiyil; maṉṉaṉai muṉṉā
ēṅkiṉāḷ; av anumaṉum 'eṉkol itu! 'eṉṉā
vīṅkiṉāṉ viyantāṉ; ulaku ēḻum viḻuṅkit
tūṅku kār iruḷ muṟṟum irintatu cuṟṟum.