கம்பராமாயணம் 5475 · சுந்தர 6.82

Section சுந்தர காண்டம் / 6. சூடாமணிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

கூந்தல் - கூந்தலாகிய; மென்மழைகொள் - மெல்லிய மழையைக் கொண்டுள்ள; முகில்மேல் - மேகத்தின் உச்சியில்; எழு - தோன்றுகின்ற, கோளின் வேந்தன் அன்னது - (கோள்களின் அரசனாகிய) சூரியனைப் போன்றிருப்பதும்; மெல்லியல்தன் - மெல்லியலாகிய பிராட்டியின்; திருமேனி - அழகிய ஒளி வீசும் மேனிபோல; சேந்தது - செந்நிறம் பெற்றதும்; அந்தம் இல் - முடிவேயில்லாத; சேவகன் - இராமபிரானின்; சேவடி என்ன - திருவடி போல, காந்துகின்றது - ஒளி வீசுவதுமான சூடாமணியை, காட்டினாள்; மாருதி கண்டான் - காட்டினாள்; அனுமன் பார்த்தான்.

கூந்தலை மழையாகவும் அளகத்தை மேகமாகவும் கூறுவது கவிச் சக்கரவர்த்தியின் இயல்பு. மஞ்சு ஒக்கும் அளக ஓதி; மழை ஒக்கும் வடித்த கூந்தல் என்று சூர்ப்பணகை பேசுவாள். ஆதலின் கூந்தலாகிய மழை கொண்ட முகில் என்று பேசப்பெற்றது. கூந்தலாகிய முகில், மென் முகில், மழை முகில் என்று கூட்டிப் பொருள் கூறுவாரும் உளர். மழை கொள் மென்கூந்தல் முகில் என்று கூட்டிப் பொருள் செய்தவரும் உளர். மென்கூந்தல் மழை கொள் முகில்மேல் என்று பிரித்து அளகபாரம் என்கின்ற குளிர்ச்சி கொண்ட கருமேகத்தின் மேல் என்று உரை கூறியவரும் உளர். பிராட்டி செந்நிறம்... ஆதலின் மெல்லியல்மேனி சேந்தது என்று கூறப் பெற்றது. இங்கே உவம உருபு மறைந்துள்ளது. பிராட்டியின் நிறத்திற்கு மாவின் இலை நிறமும் பொன்நிறமும், மணி நிறமும் உவமையாகப் பேசப்பெற்றுள. இவை யாவும் செந்நிறமே. ஈது உணராது குறை கூறிய புலவர்களும் உளர்

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Like the king of planets rising over the cloud that bears the soft rain of her hair,
  2. like the gentle lady's sacred body
  3. it glowed red; like the red feet of the endless hero
  4. it blazed; she showed it, and Māruti saw.

What the poem says

The jewel is described through three comparisons. Set in Cītai's dark hair, it is like the sun rising over a rain-cloud. It glows like her own golden body, and it shines like Irāmaṉ's red feet.

She shows it to Aṉumaṉ, here called Māruti, son of the wind god. The commentary notes that the poet often compares a woman's hair to rain-clouds.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1kūntal meṉ maḻai koḷ mukil mēl eḻu kōḷiṉ
vēntaṉ aṉṉatu; melliyal taṉ tiru mēṉi
cēntatu; antam il cēvakaṉ cēvaṭi eṉṉak
kāntukiṉṟatu; kāṭṭiṉaḷ māruti kaṇṭāṉ.