கம்பராமாயணம் 5486 · சுந்தர 7.9
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
முடிந்தன - (அனுமனது கால்களால் துகைக்கப்பட்ட மரங்களில் சில) அழிந்து போயின; பிளந்தன - பிளவுபட்டன; முறிந்தன - வளைந்து விட்டன; நெறிந்த - ஒன்றோடு ஒன்று தாக்கி நொறுங்கி அழிந்தன; மடிந்தன - தலைசாய்ந்தன; பொடிந்தன - பொடியாய்ப் போய் விட்டன; மறிந்தன - கீழ் மேலாகக் கவிழ்ந்தன; முறிந்த - துண்டுகளாகப் போய் விட்டன; இடிந்தன - இடிபட்டுப் போயின; தகர்ந்தன - சிதள் சிதளாய்த் தெறித்துப்போயின; எரிந்தன - நெருப்புப் பற்றி எரிந்து விட்டன; கரிந்த - கருகிப் போயின; ஒடிந்தன - ஒடிபட்டன; ஒசிந்தன - துவண்டு சாய்ந்தன; உதிர்ந்தன - வலியற்று உதிர்வன ஆயின; பிதிர்ந்த - சின்னபின்னப்பட்டன.
மரங்களின் அழிவு, பல வினைச் சொற்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- They were finished; they split; they snapped; they were crushed;
- they fell; they were powdered; they were overturned; they broke;
- they crumbled; they shattered; they burned; they were charred;
- they were broken off; they bent; they dropped; they were scattered.
What the poem says
In a new metre, the poet shows the destruction of the grove with a rush of sixteen verbs, each describing another way the trees were smashed, bent, burnt or scattered under Aṉumaṉ's feet.
The relentless list mimics the speed and violence of the havoc.