கம்பராமாயணம் 5489 · சுந்தர 7.12
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
கடல் திரை அலைந்தன - (அனுமன் எறிந்த மரங்களினால்) கடலின் அலைகள் அலைவனவாயின; அரக்கர் அகல் மாடம் - அரக்கருக்குரிய பெரிய மாளிகைகள்; குலைந்து உக இடிந்தன - நிலை கெட்டுச் சிதறிச் சிந்தும்படி இடிந்து போயின; குலக் கிரிகளோடு மலைந்து பொடி உற்றன - (அனுமன் எறிந்த சில மரங்கள் எழுகுலப் பருவதங்களோடு மோதிப் பொடியாய்ச் சிந்தின; வெண் மலர் - மரங்களில் உள்ள வெள்ளிய பூக்கள்; நெடுவானத்து உலைந்து விழும் மீனினொடு - பெரிய ஆகாயத்தினின்றும் நிலை கலங்கிக் கீழே விழக்கூடிய நட்சத்திரங்களோடு; மயங்கி உதிர்ந்த - கலந்து கீழே சிந்தின.
அனுமனால் வீசி எறியப்பட்ட மரங்கள் ஆகாயத்தில் தாக்கின. தாக்கப்பட்ட நட்சத்திரங்களோடு, மரங்களிலிருந்த வெண்ணிறப் பூக்கள் வேற்றுமை தெரியாமல் மயங்கிக் கீழே உதிர்ந்தன. விண்மீனுக்கு வெள்ளை மலர் ஒப்பு.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The sea's waves were tossed; the demons' broad mansions
- crumbled and collapsed; some trees, clashing with the great mountains,
- turned to dust; and, mingling with the stars that shook loose and fell from the high sky,
- their white flowers dropped.
What the poem says
Aṉumaṉ's flying trees churn the sea, bring down the demons' mansions and shatter against the great mountains of the world.
When they strike the sky, stars are knocked loose and fall, and the trees' white blossoms tumble down among them so that no one can tell flower from star.