கம்பராமாயணம் 5490 · சுந்தர 7.13

Section சுந்தர காண்டம் / 7. பொழில் இறுத்த படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1முடக்கும் நெடு வேரொடு முகந்து உலகம் முற்றும்
கடக்கும்வகை வீசின களித்த திசையானை
மடப் பிடியினுக்கு உதவ மையில் நிமிர் கைவைத்து
இடுக்கியன ஒத்தன; எயிற்றின் இடை ஞால்வ.

பொருள் · Meaning in Tamil

உலகம் முற்றும் கடக்கும் வகை - உலகம் முழுவதும் கடந்து செல்லும்படி; முடக்கும் நெடு வேரொடு முகந்து வீசின - வளைந்துள்ள நீண்ட வேருடனே பிடுங்கி அனுமனால் வீசி எறியப்பட்ட சில மரங்கள்; களித்த திசையானை எயிற்றின் இடை ஞால்வ - மத மேற் கொண்ட திக்கு யானைகளின் தந்தங்களின் நடுவில் தொங்குவனவாகி, மடப் பிடியினுக்கு உதவ - இளமையுள்ள பெண் யானைகளுக்குக் கொடுக்க; மையின் நிமிர் கைவைத்து இடுக்கியன ஒத்த - மேகத்தைப் போல மேலே நிமிர்ந்து எழுந்த தன் துதிக்கையில் வைத்து இடுக்கிக் கொண்டுள்ளனவற்றைப் போலத் தோன்றின. அனுமனால் வீசப்பட்ட மரங்கள் சில, யானையின் தந்தங்களில் தங்கின. அவை, அந்த யானை பிடிக்குக் கொடுக்க, கையினால் இடுக்கி எடுத்து வைத்தது போன்றிருந்தன. யானையின் எயிற்றிடை ஞால்வ; ஞால்வ, ஒத்தன.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Those he scooped up with their long bent roots and hurled so they crossed the whole world
  2. hung between the tusks of the rutting elephants of the quarters,
  3. and looked as if, to give them to their young mates,
  4. the elephants held them gripped in trunks raised high like clouds.

What the poem says

Some of the uprooted trees fly to the ends of the earth and catch between the tusks of the elephants who guard the directions.

The poet imagines that they look like branches the elephants have lifted in their trunks to offer to their mates.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1muṭakku neṭu vēroṭu mukantu ulakam muṟṟum
kaṭakkumvakai vīciṉa kaḷitta ticai yāṉai
maṭap piṭiyiṉukku utava maiyil nimir kai vaittu
iṭukkiyaṉa ottaṉa; eyiṟṟiṉ iṭai ñālva.