கம்பராமாயணம் 5491 · சுந்தர 7.14
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
நஞ்சம் அனையானுடைய சோலையின் நறும் பூ - விடம் போன்ற கொடிய இராவணனது அசோகவனத்து நறுமணம் மிக்க மலர்களை; விஞ்சை உலகத்தினும் இயக்கர் மலை மேலும் - வித்தியாதரர் உலகத்திலும் யட்சர்கள் வாழும் மலைகளின் மீதும்; துஞ்சுதல் இல் வானவர் துறக்க நகரத்தும் - இறத்தல் என்பது இல்லாத தேவர்கள் வாழ்கின்ற சுவர்க்க நகரத்திலும்; பஞ்சி அடி வஞ்சியர்கள் - (வாழ்பவர்களான) செம்பஞ்சுக் குழம்பு ஊட்டிய பாதங்களை உடைய மகளிர்; மொய்த்தனர் பறித்தார் - கூட்டமாய் நெருங்கி வந்து பறித்துக் கொண்டார்கள்.
இராவணனது பூந்தோட்டத்து மலர்களை விஞ்சை மகளிர் முதலியோர் பறித்துக் கொள்ளும் வகையில், அனுமன் எப்புறத்தும் மரங்களை வீசி எறிந்தனன் என்பது இதன் கருத்து.
ஆங்கிலம் · English translationAI
Translation
- In the world of the Vidyādharas, on the mountains of the Yakṣas,
- and in the heavenly city of the gods who never die,
- women with feet tinted red crowded round and plucked
- the fragrant flowers of the grove of him who is like poison.
What the poem says
Aṉumaṉ has flung the trees of Irāvaṇaṉ's garden so far that its fragrant flowers land in the worlds of celestial beings such as the Vidyādharas and Yakṣas, and in heaven itself.
There, women whose feet are dyed with red lac crowd round to gather them. Irāvaṇaṉ is called 'like poison'.