கம்பராமாயணம் 5493 · சுந்தர 7.16
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
புள்ளினொடு வண்டும் மிஞிறும் - (எறியப்பட்ட மரங்களில் உள்ள) பறவைகளையும் வண்டுகளையும் மிஞிறுகளையும்; கடி கொள் பூவும் - நறுமணம் உள்ள மலர்களையும்; முகையும் கள்ளும் - அரும்புகளையும் தேனையும்; தளிர்களோடு இனிய காயும் - துளிர்களையும் இன் சுவையுள்ள காய்களையும்; வெள்ள நெடு வேலையிடை - நீர்ப்பெருக்கை உடைய பெரிய கடலிலே; மீன் இனம் விழுங்கித் துள்ளின - உள்ள மீன் கூட்டங்கள் உட்கொண்டு (மனக்களிப்பால்) துள்ளிக் குதித்தன; மரன்பட நெரிந்தன துடித்த - (பிறகு) வீழ்ந்த மரங்கள் தம் மேற்பட்டுத் தாக்குவதால் நசுங்கினவாகித் துடிக்கலாயின.
கடலில் விழுந்த பறவை முதலியவற்றை உண்டு மகிழ்ந்த மீன்கள். பிறகு மரங்களின் தாக்குதலால் நெரிந்து துடித்தன. இன்பமும் துன்பமும் கலந்தது வாழ்க்கை. இத்தத்துவம் குறிப்பாக உணர்த்தப்படுகின்றது. தேன்; மிஞிறு - தேனீ (புறம் 12)
ஆங்கிலம் · English translationAI
Translation
- The birds, the bees and honeybees, the blossoms full of nectar,
- the honey, the buds, the tender shoots and sweet fruit,
- the shoals of fish in the vast flooding sea swallowed,
- and leapt; then, as the trees struck them, they were crushed and writhed.
What the poem says
Everything on the hurled trees, birds, bees, flowers, honey, buds and fruit, falls into the sea, and the fish gobble it up and leap for joy.
A moment later the trees themselves come crashing down and crush them. The commentary sees here a hint that pleasure and pain are mixed in every life.