கம்பராமாயணம் 5494 · சுந்தர 7.17
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
தூவிய மலர்த்தொகை சுமந்து - சிதறின மலர்களின் கூட்டங்களைத் தாங்கி; திசை தோறும் பூவின் மணம் நாறுவ - எங்கும் மலர்களின் மணமே வீசுவன; (அதனால்); புலால் கமழ்கிலாத - புலால் நாற்றம் வீசாமல் அடங்கியுள்ளனவான; திரை ஆர்கலிகள் - அலைகளை உடைய கடல்கள்; உயர் தேவர் தேவியர்களோடு இனிது ஆடும் - உயர்ந்த தேவர்கள் தம் மனைவிமார்களுடன் மகிழ்வோடு நீராடுகின்ற; ஆவி எனல் ஆய - (தாமரைப் பூக்களோடு கூடிய) பொய்கை என்று சொல்லத் தக்கனவாயின. ஆர்கலிகள் (கடல்கள் தேவருலகில் உள்ள பூம் பொய்கை போல் விளங்கின. கடல்களில் விழுந்த மலர்த்தொகையின் மிகுதி உணர்த்தப்பெறுகின்றது. ஆவி - பொய்கை. அம்மா; வியப்பு இடைச்சொல்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Bearing the mass of scattered flowers, smelling of blossoms
- in every direction, no longer reeking of fish,
- the wave-filled seas became like the pools
- where the high gods bathe in delight with their queens. Ah!
What the poem says
So many flowers from the wrecked grove have fallen into the seas that the water smells of blossoms instead of fish.
The oceans look like the lotus pools of heaven, where the gods bathe with their wives.