கம்பராமாயணம் 5503 · சுந்தர 7.26

Section சுந்தர காண்டம் / 7. பொழில் இறுத்த படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

அனங்கன் முந்துவசந்தன் முகம்கெட - மன்மதனுக்கு முன்னே வரும் அவன் நண்பனான வசந்தனுடைய முகம் பொலிவு இழக்கவும்; நந்தனங்கள் கலங்கி நடுங்க - வானில் உள்ள பூஞ்சோலைகள் போல குலைந்து நடுக்க முறவும்; தாள் பட தகர்ந்தன சந்தனங்கள் - அனுமனின் கால்பட்டதால் தகர்த்து எறியப் பட்ட சந்தன மரங்கள்; இந்தனங்களின் வெந்து எரி சிந்திட - விறகுகளைப் போல எரிந்து நெருப்பைக் கக்கவும்.

நந்தனம் - தேவர் உலகத்தில் உள்ள பூஞ்சோலை; அசோகவனத்துச் சந்தன மரங்களின் நெருப்பு நந்தனங்களில் இருந்த வசந்தன் முகத்துப் பொலிவை அழித்தது. வசந்தன் - வசந்த காலத்துக்குரிய தேவன்; மன்மதனின் தோழன் என்பது புராண வழக்கு. அனங்க வசந்தன் எனக் கொண்டு அனங்கனாகிய வசந்தன் என இருபெயரொட்டாக்கி மன்மதனையே குறித்ததாகவும் கொள்ளலாம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The sandal trees were shattered; trampled underfoot,
  2. they burned like firewood and threw out flames,
  3. so that the face of Vasanta, who goes before the bodiless god, was ruined,
  4. and the Nandana groves were shaken and trembled.

What the poem says

The sandalwood trees, crushed under Aṉumaṉ's feet, burn like kindling. The fire is so great that the gardens of heaven tremble.

Vasanta, the god of spring and friend of Kāma, the bodiless god of love, loses his radiance. Springtime pleasure has no place amid this havoc.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1cantaṉaṅkaḷ takarntaṉa; tāḷ paṭa
intaṉaṅkaḷiṉ ventu eri cintiṭa
muntu aṉaṅka vacantaṉ mukam keṭa
nantaṉaṅkaḷ kalaṅki naṭuṅkavē.