கம்பராமாயணம் 5509 · சுந்தர 7.32

Section சுந்தர காண்டம் / 7. பொழில் இறுத்த படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1வண்டு அலம்பு நல் ஆற்றின் மராமரம்
வண்டல் அம் புனல் ஆற்றின் மடிந்தன;
விண்டு அலம்பு கம் நீங்கிய வெண்புனல்
விண்டு அலம்புக நீள்மரம் வீழ்ந்தவே.

பொருள் · Meaning in Tamil

வண்டு அலம்பு நல் ஆற்றின் மராமரம் - வண்டுகள் ஒலிக்கும்படியான, அழகிய சாலையிலிருந்த ஆச்சா மரங்கள்; வண்டல் அம்புனல் ஆற்றின் மடிந்தன - வண்டலைக் கொண்ட அழகிய நீர் நிறைந்த ஆற்றில் போய் விழுந்து அழுந்தின; விண் தலம் புக நீள் மரம் - வான் அளவு உயர்ந்து வளர்ந்த வேறு சில மரங்கள்; விண்டு அலம்பு கம் நீங்கிய வெண்புனல் வீழ்ந்த - திருமாலின் திருவடிகளைப் பிரம தேவன் கழுவியதனால் தோன்றி வானத்தினின்றும் பூமியை நோக்கி இறங்கி வந்த வெள்ளிய நீரை உடைய ஆகாச கங்கையாற்றிலே வீழ்ந்தன.

விண்டு - விஷ்ணு; (திருமால்) கம் - ஆகாயம்; இதுவும் யமக அணி. வெண் புனல் - கங்கை; அதனால், “ஆறு” என்பது காவிரியைக் குறிக்கிறது என்பாரும் உளர். இதுமுதல் (5460 - 5463) முடிய முன் இரண்டடிகளின் முதல் இரு சீர்கள் ஒருவகையாகவும் பின் இரண்டடிகளின் முதல் இரு சீர்கள் வேறுவகையாகவும் மடக்கி வந்து, யமக அணி பொருந்தப் பெற்றிருப்பது காண்க.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The marāmaram trees of the fine avenue where bees hum
  2. fell and sank in the river of lovely silt-laden water;
  3. into the white stream that, having washed the feet of Viṇṭu, left the sky,
  4. fell the tall trees that had risen high enough to enter the heavens.

What the poem says

The destruction of the grove continues. Some trees, flung by Aṉumaṉ, drop into an earthly river; others, so tall they seemed to pierce the sky, fall into the heavenly Gaṅgā, the white stream said to have arisen when Brahmā washed the feet of Viṣṇu and to flow down from the sky.

Again the poet uses yamakam: vaṇṭu alampu / vaṇṭal am puṉal, and viṇṭu alampu / viṇtalam puka repeat the same sounds with new meanings. Since the white stream is the Gaṅgā, some take the first 'river' to be the Kāvēri.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1vaṇṭu alampu nal āṟṟiṉ marāmaram
vaṇṭal am puṉal āṟṟiṉ maṭintaṉa;
viṇṭu alampu kam nīṅkiya veṇ puṉal
viṇtalam puka nīḷ maram vīḻntavē.