கம்பராமாயணம் 5510 · சுந்தர 7.33

Section சுந்தர காண்டம் / 7. பொழில் இறுத்த படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1தாமரைத் தடம் பொய்கை செஞ் சந்தனம்
தாம் அரைத்தன ஒத்தது; உகைத்தலின்
காமரக் களி வண்டொடும் கள்ளொடும்
கா மரக்கடல் பூக்கடல் கண்டவே.

பொருள் · Meaning in Tamil

உகைத்தலின் - அனுமன் பலவகை மரங்களை வீச எறிந்ததனால்; தாமரை தடம் பொய்கை - தாமரை மலர்கள் நிறைந்த பெரிய தடாகம்; செம்சந்தனம் தாம் அரைத்தன ஒத்தது - சிவந்த சந்தனக்கட்டையை அரைத்துக்கரைக்கப்பட்டன போல் தோன்றிற்று; காமரம் - (அன்றியும்) சோலையின்மரங்கள்; காமர் அம் கடல் - தாம் வீழப் பெற்ற அழகிய அந்த உவர்க்கடலை; காமரம் களி வண்டொடும் கள்ளொடும் - காமரம் என்னும் பண்பாடிக் களிக்கும் வண்டுகளோடும் தேனோடும் கூடி; பூக் கடல் கண்ட - மலர்களால் இயன்ற கடலாகச் செய்தன. அனுமன் வீசிஎறிந்த மரங்களால் தாமரைத்தடாகம் சந்தனக் குழம்பாயிற்று; உவர்க்கடல் மலர்க்கடலாயிற்று. கா - சோலை; காமரம் - ஒரு வகைப் பண்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The wide pools full of lotuses looked as though red sandalwood
  2. had been ground into them; because he hurled the trees,
  3. the grove's trees, with bees drunk on the kāmaram melody and with their honey,
  4. turned that lovely salt sea into a sea of flowers.

What the poem says

Aṉumaṉ hurls tree after tree. The crushed red lotuses in the great pools make the water look like a paste of red sandalwood ground and stirred in. The grove's trees, falling into the ocean with their blossoms, honey and singing bees, turn the salt sea into a sea of flowers.

The play on kāmaram is again a yamakam: kā maram means 'trees of the grove', while kāmaram is also the name of a musical mode that the bees are imagined to hum.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1tāmarait taṭam poykai ceñ cantaṉam
tām araittaṉa otta; tukaittaliṉ
kāmaram kaḷi vaṇṭoṭum kaḷḷoṭum
kāmar akkaṭal pūkkaṭal kaṇṭavē.